Published:Updated:

புதுக்கோட்டை: மணல் திருட்டு புகார்; விசாரிக்கச் சென்ற கிராம உதவியாளருக்கு நேர்ந்த துயரம்!

மணல் திருட்டு

மணல் திருட்டு சம்பந்தமாக விசாரித்து ஆய்வு செய்யச் சென்ற கிராம உதவியாளர் கார் மோதி இறந்த சம்பவம் அறந்தாங்கியில் சோகத்தை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை: மணல் திருட்டு புகார்; விசாரிக்கச் சென்ற கிராம உதவியாளருக்கு நேர்ந்த துயரம்!

மணல் திருட்டு சம்பந்தமாக விசாரித்து ஆய்வு செய்யச் சென்ற கிராம உதவியாளர் கார் மோதி இறந்த சம்பவம் அறந்தாங்கியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Published:Updated:
மணல் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கம்மங்காடு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராகப் பணிபுரிந்துவந்தவர் செந்தில். கம்மங்காடு சரக எல்லைக்குட்பட்ட ஆளப்பிறந்தான் பகுதியில் உள்ள கண்மாயில் மணல் திருட்டு நடைபெறுவதாக கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, செந்திலை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறார் கிராம நிர்வாக அலுவலர்.

அதன்படி அந்தப் பகுதிக்குச் சென்ற செந்தில், ஆய்வை முடித்துவிட்டு ஆளப்பிறந்தான் கடை வீதி அருகே சாலை ஓரம் நின்று செல்போனில் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கொடுத்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, புதுப்பட்டியிலிருந்து அறந்தாங்கி நோக்கி வந்த கார் ஒன்று செந்தில் மீது பயங்கரமாக மோதியது.

சம்பவ இடம்
சம்பவ இடம்

இதில், தூக்கிவீசப்பட்ட செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுப்பட்டி போலீஸார், செந்திலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணல் திருட்டு சம்பந்தமாக விசாரித்து ஆய்வு செய்யச் சென்ற கிராம உதவியாளர் கார் மோதி இறந்த சம்பவம் அறந்தாங்கியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உயிரிழந்த செந்தில் மணல் கொள்ளையர்களால் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறி மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள், அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து போலீஸார், வருவாய்த்துறையினர் செந்திலின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலீஸாரின் விசாரணயில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் புதுப்பட்டி அருகே போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பவர் தெரியவந்தது. அவர் புதுப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

உயிரிழந்த செந்தில்
உயிரிழந்த செந்தில்

இந்தச் சம்பவம் குறித்து உயிரிழந்த கிராம அலுவலக உதவியாளரின் குடும்பத்தினரிடம் பேசினோம். ``மணல் திருட்டு மட்டுமல்ல, எந்தவித முறைகேடு நடந்தாலும் முதல் ஆளாகச் சென்றுவிடுவார். குடும்பத்தைக்கூடப் பார்க்காம, வேலைன்னு ஒடி, ஓடி வேலை செஞ்சார். இப்போ ரெண்டு சின்னக் குழந்தைங்களை விட்டுட்டு இறந்துபோயிட்டாரு. முறையான விசாரணை நடத்தணும்" என்றனர்.

மணல் திருட்டு நடப்பதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற கிராம உதவியாளர் கார் மோதி இறந்திருக்கிறார். இந்தப் பகுதியில் மணல் திருட்டு அவ்வப்போது நடைபெற்றுவருகிறது. எனவே, மணல் திருட்டைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism