Published:Updated:

நெல்லை: காலில் விழுந்து மன்னிப்புக் கேள்; மறுத்தால் `ஊர் விலக்கம்’ - ஊர் கமிட்டி சர்ச்சை

ஊர் கமிட்டி நிர்வாகிகள்

பண மோசடி செய்ததையும், கட்டப் பஞ்சாயத்து செய்வதையும் தட்டிக் கேட்டவர்களை ஊர் விலக்கம் செய்துவைத்ததுடன், அவர்கள் ஊர் கமிட்டி முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

நெல்லை: காலில் விழுந்து மன்னிப்புக் கேள்; மறுத்தால் `ஊர் விலக்கம்’ - ஊர் கமிட்டி சர்ச்சை

பண மோசடி செய்ததையும், கட்டப் பஞ்சாயத்து செய்வதையும் தட்டிக் கேட்டவர்களை ஊர் விலக்கம் செய்துவைத்ததுடன், அவர்கள் ஊர் கமிட்டி முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Published:Updated:
ஊர் கமிட்டி நிர்வாகிகள்

நெல்லை டவுன் பாட்டப்பத்து பகுதியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குள் ஊர் கமிட்டி அமைத்து செயல்பட்டுவருகிறார்கள். ஊர் கமிட்டியின் நிர்வாகிகள் சிலர் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டுவந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், சீட்டு நடத்திவந்திருக்கிறார்கள். மக்களின் சீட்டுப் பணத்திலும் கமிட்டி நிர்வாகிகள் கையாடல் செய்துள்ளனர் என்கிறார்கள்.

ஊர் கமிட்டி காலில் விழும் முதியவர்
ஊர் கமிட்டி காலில் விழும் முதியவர்

அதே பகுதியில் வசிக்கும் சுந்தர்ராஜ், பேச்சிராஜா ஆகியோர் ஊர் கமிட்டியின் முறைகேடுகளைத் தட்டிக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இருவருமே இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி நிர்வாகிகளாக இருக்கின்றனர். சுந்தர்ராஜ் கட்சியின் மாநகரச் செயலாளராகவும், பேச்சிராஜா கிளைச் செயலாளராகவும் உள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊர் கமிட்டி குறித்து விமர்சனம் செய்ததால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் ஊர் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அதில், பேச்சிராஜாவை ஊரார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்கள். அவர் மறுத்துவிட்டதால் அவரை ஊர் விலக்கம் செய்தனர். அத்துடன், அவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டனர்.

கிராம கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்
கிராம கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள்

ஆனால், கிராமத்தினர் சிலர் தங்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பேச்சிராஜா குடும்பத்தினரை அழைத்திருக்கிறார்கள். அத்துடன், சமீபத்தில் நடந்த பேச்சிராஜா திருமணவிழாவிலும் கிராம மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். பேச்சிராஜாவுடன் தொடர்பில் இருந்த சுமார் 60 பேரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்திருக்கிறார்கள் ஊர் கமிட்டியினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பின்னர், ஊர் விலக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவருமே ஊர் கமிட்டி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதை ஏற்று சிலர் ஊரார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். பேச்சிராஜா தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததுடன், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகார் தொடர்பாக ஜூன் 8-ம் தேதி காவல்துறை உதவி ஆணையர் விஜயகுமார் விசாரணை நடத்தியிருக்கிறார்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

விசாரணைக்கு ஆஜரான சுந்தர்ராஜ், பேச்சிமுத்து ஆகியோரை உதவி ஆணையர் விஜயகுமார் அவதூறாகப் பேசியதாக சி.பி.ஐ (எம்.எல்) கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். அத்துடன், கிராமத்தில் திருட்டுப்போன மின் மோட்டார், துணி மூட்டை எரிந்தது ஆகிய வழக்குகளில் இருவரையும் சிக்கவைக்கவும் போலீஸார் முயல்வதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். அதைக் கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சி.பி.ஐ (எம்.எல்) கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரான வழக்கறிஞர் ஜி.ரமேஷ், “பாட்டபத்து கிராமத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டித்துக் குரல் கொடுத்த எங்கள் கட்சியின் நிர்வாகிகளை ஊர் விலக்கம் செய்தது தவறானது. அதைக் கண்டித்து எங்கள் நிர்வாகிகள் முறைப்படி காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள்.

பொறுப்புடன் செயல்படவேண்டிய காவல்துறை அதிகாரி பொறுப்பற்ற முறையில் பேசியது கண்டிக்கத்தக்கது.
வழக்கறிஞர் ஜி.ரமேஷ், மாநிலக் குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்.எல்)

புகாரை விசாரித்த உதவி ஆணையர் விஜயகுமார், ‘ஊர் கமிட்டி காலில் விழச் சொன்னால் விழவேண்டியது தானே... அதுதானே நாட்டு நடப்பு. அதை ஏன் செய்யலை’ என்று ஏளனமாகப் பேசியிருக்கிறார். இந்த வழக்கை அவர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதோடு, மனித உரிமைக்கு எதிராகப் பேசியுள்ள அவர்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறோம்” என்றார்.

இதற்கிடையே, ஊர் கமிட்டி முன்பாக பாட்டப்பத்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism