Published:Updated:

`பள்ளி வளாகத்தில் செய்யக்கூடிய காரியமா இது?'- நாமக்கல் ஆசிரியரை பின்னியெடுத்த கிராம மக்கள்

தாக்கப்பட்ட ஆசிரியர் சரவணன்

நாமக்கல் அருகே பள்ளியில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியரையும் அங்கன்வாடி பெண் ஊழியரையும் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.

`பள்ளி வளாகத்தில் செய்யக்கூடிய காரியமா இது?'- நாமக்கல் ஆசிரியரை பின்னியெடுத்த கிராம மக்கள்

நாமக்கல் அருகே பள்ளியில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியரையும் அங்கன்வாடி பெண் ஊழியரையும் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.

Published:Updated:
தாக்கப்பட்ட ஆசிரியர் சரவணன்

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகிலுள்ள எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது. அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் படிக்க வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில், கடந்த நான்கு வருடங்களாகப் பணியாற்றி வருபவர் ஆசிரியர் சரவணன். இவர், புதன்சந்தை பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கும் அதே பள்ளியில் அங்கன்வாடி மையத்தின் பொறுப்பாளர் சரஸ்வதிக்கும் (பெயர் மாற்றம்) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் சரவணன்
ஆசிரியர் சரவணன்

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக ஆசிரியர் சரவணனும் சரஸ்வதியும் பள்ளி வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்த்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் ஊர்மக்களுடன் சேர்ந்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அவரும் புகாரைப் பெற்றுக்கொண்டு இருவரையும் எச்சரித்திருக்கிறார். ஆனால், மீண்டும் ஆசிரியரும் அந்தப் பெண்ணும் பள்ளி வளாகத்தில் தகாத முறையில் நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர், வகுப்பறையிலிருந்த ஆசிரியர் சரவணனை சரமாரியாக அடித்து உதைத்தனர். அதே பள்ளியில் இருக்கும் சக ஆசிரியர்களும் சரவணன் மீது தாக்குதல் நடத்தினர். இதனிடையே தலைமை ஆசிரியர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

ஆசிரியரை தாக்கிய ஊர் மக்கள்
ஆசிரியரை தாக்கிய ஊர் மக்கள்

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம், `சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கவேண்டிய ஆசிரியரே, தவறான செயலில் ஈடுபட்டது நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism