Published:Updated:

`கிரிக்கெட் மோதல்;ஒரு கிலோ மீட்டர் விரட்டிச் சென்று கொலை!' -சென்னையில் ஓராண்டுக்குப் பிறகு அதிர்ச்சி

கொலை செய்யப்பட்ட ஷாஜகான்
கொலை செய்யப்பட்ட ஷாஜகான்

சென்னையில் கிரிக்கெட் விளையாட்டில் நடந்த மோதல் ஓராண்டுக்குப் பிறகு கொலையில் முடிந்துள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான் (23). இவர் கால் சென்டரில் வேலைபார்த்து வந்தார். இவர் வீட்டிலிருந்து இன்று (4.6.2020) வில்லிவாக்கம் தாதங்குப்பம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்றார். அப்போது ஷாஜகானை 5 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்தது. திடீரென அந்தக் கும்பல் ஷாஜகானை வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஷாஜகானை அந்தக் கும்பல் வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஷாஜகான் அவர்களிடமிருந்து தப்பியோடியிருக்கிறார்.

வில்லிவாக்கம் காவல் நிலையம்
வில்லிவாக்கம் காவல் நிலையம்
`எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது' -திருமணமான 11 மாதத்தில் விபரீத முடிவெடுத்த மனைவி

வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் வழியாக அவர் ஓடினார். ஆனால் அந்தக் கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று, வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் அருகில் உள்ள கால்வாய் மீது ஏறி ஷாஜகான் சென்றபோது மர்மக் கும்பல் மடக்கிப் பிடித்து சரமாரியாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே ஷாஜகான், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வில்லிவாக்கம் போலீஸார், அங்கு வந்தனர். ஷாஜகானை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஷாஜகான், ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று கூறினார். அதனால் ஷாஜகானின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். பின்னர், கொலைச் சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

` பெண் கொடுத்த நகை பறிப்புப் புகார்; 6 கொலைகள்..!' -போலீஸுக்கு அதிர்ச்சிகொடுத்த வடசென்னை ரவுடிகள்
Representational Image
Representational Image

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வில்லிவாக்கத்தில் உள்ள மைதானம் ஒன்றில் ஷாஜகான் மற்றும் அவரின் நண்பர்கள் பிரபு உட்பட பலர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். கடந்த ஆண்டு ஷாஜகான் விளையாடியபோது அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம், அஜீத், திவாகர் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் சண்முகம், அஜீத், திவாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்ததும், ஷாஜகான் மற்றும் பிரபு ஆகிய இருவரும் சண்முகம், அஜீத், திவாகர் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரில் ஷாஜகான், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Representational Image
Representational Image

கொரோனா ஊரடங்கு காரணமாக 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் இருதரப்பினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதனால் பழிக்குப் பழிவாங்க ஷாஜகானை 3 பேரும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கும்பல் ஷாஜகானை ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று கொலை செய்துள்ளனர். அதனால் ஷாஜகானைக் கொலை செய்தவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு