Published:Updated:

விழுப்புரம்: காதலை கண்டித்த விவகாரத்தில் கொடூர தாக்குதல்; இளைஞர் படுகொலை; 7 பேருக்கு ஆயுள் தண்டனை!

தண்டனை பெற்ற 7 பேர். ( தே.சிலம்பரசன் )

காதலை கண்டித்த விவகாரத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் 2014-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த குற்றத்தில் ஈடுபட்ட 7 பேருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்: காதலை கண்டித்த விவகாரத்தில் கொடூர தாக்குதல்; இளைஞர் படுகொலை; 7 பேருக்கு ஆயுள் தண்டனை!

காதலை கண்டித்த விவகாரத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் 2014-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த குற்றத்தில் ஈடுபட்ட 7 பேருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
தண்டனை பெற்ற 7 பேர். ( தே.சிலம்பரசன் )

விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகளை, அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்ற நபர் காதலித்ததாக கூறப்படுகிறது. இதனை கலியமூர்த்தியின் உறவினர்களான சங்கர், சரவணன் குடும்பத்தினர் கண்டித்ததால்... லட்சுமணனுடன் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபம் கொண்ட லட்சுமணன்... சங்கர் மற்றும் சரவணன் குடும்பத்தில் யாராவது ஒருவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 16.01.2014 அன்று பொங்கல் பண்டிகைக்காக, ஆனாங்கூரில் உள்ள சரவணன் வீட்டிற்கு சங்கருடைய குடும்பத்தினர் சென்றுள்ளனர். அன்றைய தினம், மாலை 3 மணி அளவில் தனது அண்ணன் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட ஏழு பேருடனும், பயங்கர ஆயுதங்களுடனும் சரவணனின் வீட்டிற்குள் அத்துமீறி சென்றுள்ளார் லட்சுமணன்.

விழுப்புரம் நீதிமன்றம்
விழுப்புரம் நீதிமன்றம்
தே.சிலம்பரசன்

அப்போது, அந்த 7 பேர் கும்பல் அங்கிருந்த சங்கர் மற்றும் சரவணன் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி, பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சரவணனின் மகன் கோபி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய போலீஸார். இந்த வழக்கு விசாரணை, கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், நேற்று மாலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி (பொறுப்பு) வெங்கடேசன்... குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணன், நாகராஜ், தீனா (எ) வெங்கடேஷ், மணி, சரண், பாபு, அய்யப்பன் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், அந்த 7 பேருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism