Published:Updated:

விழுப்புரம்: கொலையாளி அபினேஷ் கொடூரக் கொலை; 3 பேர் கைது; காரணம் பழிக்குப் பழியா... பின்னணி என்ன?

கைதுசெய்யப்பட்ட 3 பேர்

இரு சிறுவர்களைக் கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கை செய்து, கொலைசெய்த வழக்கில் தொடர்புடைய அபினேஷ்... அண்மையில் கொடூரக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி தெரியவந்துள்ளது.

விழுப்புரம்: கொலையாளி அபினேஷ் கொடூரக் கொலை; 3 பேர் கைது; காரணம் பழிக்குப் பழியா... பின்னணி என்ன?

இரு சிறுவர்களைக் கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கை செய்து, கொலைசெய்த வழக்கில் தொடர்புடைய அபினேஷ்... அண்மையில் கொடூரக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி தெரியவந்துள்ளது.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட 3 பேர்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகேயுள்ள மீனவ கிராமமான நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த அபினேஷ், கடந்த 9-ம் தேதி முகம், தலையில் பலத்த காயங்களுடன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அபினேஷ் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த கோட்டக்குப்பம் காவல்துறையினர், கொலைக்குக் காரணம் முன் விரோதமா.... கொலை செய்தது யார்... வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா உள்ளிட்ட சந்தேகக் கோணங்களில் தீவிரமாக விசாரித்துவந்தனர். கொலையாளி யாரெனக் கண்டறிவதற்காக, தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

கொலை - அபினேஷ்
கொலை - அபினேஷ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சம்பவத்தில், தற்போது அதிர்ச்சிகரமான புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோட்டகுப்பம், சோலை நகர்ப் பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பேர்தான் இந்தக் கொலையை செய்துள்ளனர் எனும் திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரியவந்தது. அதன் பின்னர், புதுச்சேரி அருகேயுள்ள சோலை நகர்ப் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (20), கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த அஜித்ராஜ் (22), அகமத் அசேன்(22) ஆகிய மூன்ரு பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் காவல்துறையினர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, திடுக்கிடும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை அருகேயுள்ள சோலை நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் அபினேஷ் வசித்துவந்தபோது, மேல்தளத்தில் விண்ணரசன் என்பவர் அவர் மனைவி, 7 வயது மகனுடன் குடியிருந்துவந்திருக்கிறார். ஓரினச் சேர்க்கையாளரான அபினேஷ், அந்த 7 வயது சிறுவனிடமும் தகாத முறையில் நடக்க முயன்றாராம். இதனால் அச்சம்கொண்ட அந்தச் சிறுவன், அபினேஷ் தன்னிடம் நடந்துகொண்டவிதத்தைப் பற்றித் தன் தந்தையிடம் விவரித்துள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை விண்ணரசன், தன் சித்தப்பா கலையரசனுடன் கடந்த 4-ம் தேதி மதியம் அபினேஷை நேரில் சந்தித்து, `ஏன் இப்படித் தகாத முறையில் நடந்துகொண்டாய்... இனிமேல் அப்படி நடந்துகொள்ளாதே' எனக் கூறி, கடுமையாக எச்சரித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட அபினேஷ்
கொலைசெய்யப்பட்ட அபினேஷ்

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த அபினேஷ், `என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா? நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. என்கிட்டவெச்சுக்கிட்டா இரண்டு பேரையும் கொன்னுடுவேன்' என மிரட்டியிருந்தாராம். இந்த நிலையில், மறுதினமே (5-ம் தேதி) கலையரசன் சோலை நகர் கடற்கரைப் பகுதியில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதை அபினேஷ்தான் செய்திருக்கக்கூடும் என்ற பேச்சு ஊர் முழுக்கப் பேசப்பட்டுள்ளது. இதனால் கலையரசனின் உறவினர் சதீஷ், அபினேஷைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என எண்ணியுள்ளார். ஆகவே நண்பர்களான அப்பு, அஜித்ராஜ், அகமது அசேன், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து அபினேஷைக் கொடூரமாகக் கொலைசெய்துள்ளனர். இந்தப் பரபரப்பு தகவல் முழுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அப்பு, அரவிந்த் ஆகிய இரண்டு பேரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

பழிக்குப்பழியாக நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism