Published:Updated:

சொகுசு விடுதி; நவீன ஸ்பா; துணை நடிகைகள்! -போலீஸுக்கு அதிர்ச்சிகொடுத்த புதுச்சேரி சந்துருஜி

கைது செய்யப்பட்ட சந்துருஜி (வலது ஓரம்)

சினிமா நடிகைகளை சொகுசு விடுதியில் அடைத்துவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், புதுச்சேரியைச் சேர்ந்த சந்துருஜியை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கைதுசெய்துள்ளது.

சொகுசு விடுதி; நவீன ஸ்பா; துணை நடிகைகள்! -போலீஸுக்கு அதிர்ச்சிகொடுத்த புதுச்சேரி சந்துருஜி

சினிமா நடிகைகளை சொகுசு விடுதியில் அடைத்துவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், புதுச்சேரியைச் சேர்ந்த சந்துருஜியை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கைதுசெய்துள்ளது.

Published:Updated:
கைது செய்யப்பட்ட சந்துருஜி (வலது ஓரம்)

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டக்குப்பம், புதுச்சேரியை ஒட்டி அமைந்திருக்கிறது. அதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக நூற்றுக்கணக்கில் சொகுசு விடுதிகளும் மசாஜ் நிலையங்களும் இயங்கிவருகின்றன.

தமிழகப் பகுதியாக இருந்தாலும் தங்கு தடையின்றி கிடைக்கும் புதுச்சேரி மதுபானங்கள், விடுதி அறைக்கே சப்ளை செய்யப்படும் பாலியல் தொழில் பெண்கள், மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத கடற்கரை, குறைவான வாடகை உள்ளிட்ட காரணங்களால் கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடி, ஆரோவில் உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும்.

சொகுசு விடுதி
சொகுசு விடுதி

இதில் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்படும் சில விடுதிகளால் குற்றச்சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, புதிதாகக் கட்டப்பட்டுவரும் சொகுசு விடுதி ஒன்றில் சினிமா துணை நடிகைகளை அடைத்துவைத்து, மசாஜ் என்ற பெயரில் சிலர் பாலியல் தொழில் நடத்துவதாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாருக்கு ரகசியத் தகவல் சென்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மீட்கப்பட்ட சினிமா துணை நடிகைகள்:

அதனடிப்படையில், கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையிலான போலீஸார், தந்திராயன் குப்பத்தில் இருக்கும் அந்த விடுதியைத் தொடர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தனர். அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டதால், நேற்று காலை 11 மணிக்கு அதிரடி சோதனை மேற்கொண்ட போலீஸார், அங்கிருந்த இரண்டு பெண்களை மீட்டனர். அத்துடன், விடுதியின் உரிமையாளரான புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த சந்துருஜி, அவரது நண்பர் விஜயகுமார் மற்றும் விடுதியின் காவலாளி அனில் ஜோசப் ஆகியோரைக் கைது செய்து, அவர்கள்மீது விபசார தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்துருஜி (வலது ஓரம்)
கைது செய்யப்பட்ட சந்துருஜி (வலது ஓரம்)

கோட்டக்குப்பம் உள்கோட்ட டிஎஸ்பி அஜய்தங்கத்திடம் இதுகுறித்துப் பேசியபோது, “ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதிலிருந்து இந்தப் பகுதிகளில் எங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருப்பதுடன், பொதுமக்கள் கூறும் ரகசியப் புகார்கள் குறித்தும் விசாரிப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குளிரூட்டப்பட்ட நவீன ’ஸ்பா’ – சொகுசு அறைகள்:

அதன்படி, புதுச்சேரியைச் சேர்ந்த ஏ.டி.எம் குற்றவாளி சந்துருஜி என்பவர், இந்த விடுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவருவதாக எங்களுக்கு ரகசியப் புகார் வந்தது. எங்கள் போலீஸ் டீமின் ஒரு வார கண்காணிப்பில், அங்கு சட்டவிரோதத் தொழில் நடப்பது உறுதிசெய்யப்பட்டதும் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு அவர்களைக் கைதுசெய்தோம்.

மூன்று மாடிகள், குளிரூட்டப்பட்ட சொகுசு அறைகள், ஸ்பா, கட்டில், மெத்தைகள் என அனைத்து வசதிகளுடன் இருக்கும் அந்த விடுதி, பல மாதங்களாக புழக்கத்தில் இருந்துவருகிறது. ஆனால், யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக, விடுதியில் கட்டுமானப் பணிகள் நடப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த கொத்தனார்கள், பெயின்டர்கள், ஆசாரிகள் போன்றவர்களை வரவைழைத்திருக்கின்றனர். எங்கள் சோதனையில், பல நாள்களாக அங்கு பாலியல் தொழில் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் சிக்கியிருக்கின்றன.

சாப்பாடுகூட தருவதில்லை:

தனது ஹுண்டாய் காரில் சென்னை வளசரவாக்கம் சென்ற சந்துருஜி, சினிமாவில் துணை நடிகைகளாக இருக்கும் 2 பெண்களை புதுச்சேரியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பாவில் வேலை என்று அழைத்துவந்திருக்கிறார். அந்த காரை பறிமுதல் செய்திருக்கிறோம். இங்கு வந்ததும், கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார். ’எங்களுக்கு மூன்று வேளையும் சாப்பாடுகூட தருவதில்லை’ என்று அந்த இரண்டு பெண்களும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான உமாசங்கர் என்பவர் தப்பிவிட்டார். அவரைத் தேடி வருகிறோம்” என்றார்.

சீல் வைக்கப்படும் விடுதி
சீல் வைக்கப்படும் விடுதி

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய காவலர் ஒருவர், ”குறிப்பிட்ட பெண்களை வைத்து மட்டும் இந்தத் தொழிலைச் செய்தால் வாடிக்கையாளர்கள் வருவது குறைந்துவிடும். அதனால் விபசாரக் கும்பல் அனைவரும் தொடர்பில்தான் இருப்பார்கள். சுழற்சி முறையில் பெண்களை மாற்றிக்கொள்வார்கள்.

சினிமா நடிகைகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்பதால், வறுமையில் இருக்கும் குடும்பப் பெண்களையும், வாய்ப்பில்லாமல் இருக்கும் துணை நடிகைளையும் டார்கெட் செய்கிறது இந்தக் கும்பல். புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில், அனைத்து மாநில பாலியல் தொழில் பெண்களும் உறவினர்களைப் போல குடும்பம் குடும்பமாகத் தங்கியிருக்கின்றனர்” என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

யார் இந்த சந்துருஜி ?

கடந்த 2018-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடந்த வாகனச் சோதனையில், ரமீஷ் என்பவரைப் பிடித்து சோதனை செய்தது அம்மாநில போலீஸ். அப்போது, சுமார் 20-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம் அட்டைகள் அவரிடம் கைப்பற்றப்பட்டது. உரிய ‘விசாரணை’க்குப் பிறகு, போலி ஏ.டி.எம் அட்டைகள் மூலம் பணத்தைக் கொள்ளையடிப்பதை ஒப்புக்கொண்ட அவர், புதுச்சேரியிலிருந்து போலி ஏ.டி.எம் அட்டைகளை வாங்கிய முகவரியைத் தெரிவிக்கிறார். புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ், பிருந்தாவனம் பகுதியில் இயங்கிவந்த பி.ஜே.எம் என்டர்பிரைசஸ் என்ற கம்ப்யூட்டர் சென்டரில் அதிரடியாக நுழைந்தனர்.

டி.எஸ்.பி அஜய்தங்கம் தலைமையிலான டீம்
டி.எஸ்.பி அஜய்தங்கம் தலைமையிலான டீம்

அப்போது, அங்கிருந்த பதிவு செய்யப்படாத வெள்ளை நிற ஏ.டி.எம் அட்டைகள், பி.ஓ.எஸ் (ஸ்வைப்பிங்) மெஷின்கள் போன்றவற்றைக் கைப்பற்றினர். ஏ.டி.எம் மையங்களில் ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தும் இந்தக் கும்பல், அதன்மூலம் திருடப்படும் விவரங்களை வைத்து போலி ஏ.டி.எம் அட்டைகளைத் தயாரித்ததும், போலியான நிறுவனங்களின் பெயரை நகராட்சியில் பதிவுசெய்து, ’ஸ்வைப்பிங்’ மெஷினை வாங்கி, அதன்மூலம் தமிழகம், கேரளா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் பணத்தை சுருட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கைதுசெய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் இருப்பவர்தான், இந்த சந்துருஜி என்கின்றனர் போலீஸார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism