Published:Updated:

விழுப்புரம்: கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 10-ம் வகுப்பு மாணவி? - காவல்துறை விசாரணை

போக்சோ

விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

விழுப்புரம்: கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 10-ம் வகுப்பு மாணவி? - காவல்துறை விசாரணை

விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

Published:Updated:
போக்சோ

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் அரசு உயர் நிலைப்பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். அந்த மாணவி, கடந்த சில தினங்களாக உடலளவிலும் மனதளவிலும் சோர்வுடன் இருந்துள்ளார். இதை கவனித்த அப்பள்ளியில் பணியாற்றும் ஹேமலதா என்ற ஆசிரியை, மாணவியிடம் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்
விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்
தே.சிலம்பரசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது, அந்தச் சிறுமி உறவினர் சசி என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த மாணவியிடம் விசாரித்தபோது, உறவினர் சசியின் நண்பர்கள், அப்பகுதி இளைஞர்கள் சிலர் எனச் சுமார் 10 பேர் வரை அந்த மாணவியிடம் பாலியல்ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கண்ணீருடன் கூறினாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை ஹேமலதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தத் தகவல் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்' விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட மகளிர் காவல்துறையினர், மாணவிடம் விசாரணை மேற்கொண்டார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மாணவி அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் முதற்கட்டமாக மூன்று பேரை அழைத்து விசாரித்தனர். அப்போது, மாணவியின் உறவினர் சசி என்பவர் மட்டும் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே, அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கும் மகளிர் காவல்துறையினர், இன்றைய தினம் சசியை சிறையில் அடைக்க உள்ளனர். மேலும், மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற சந்தேக கோணத்தில், இவ்வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருவதாக விழுப்புரம் மகளிர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism