Published:Updated:

விழுப்புரம்: திருமணமான அடுத்த நாள் பிரிந்து சென்ற இளம்பெண் - விரக்தியில் விபரீத முடிவெடுத்த இளைஞர்

தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
News
தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

மாற்றுச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்துவந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான இளைஞர் வெற்றிவேல். கனரக வாகன ஓட்டுநராக வேலை செய்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான கல்லூரி மாணவி பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்துவந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதாம். இந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள நினைத்த இந்த இளம் காதல் ஜோடி, நேற்று முன்தினம் அதிகாலை கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்திலுள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர்.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம்
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம்
தே.சிலம்பரசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மணக்கோலத்துடன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குச் சென்றவர்கள் ஒரு மனுவை அளித்தனர். அதில், ``எங்களுடைய காதலை பெற்றோர்கள் விரும்பவில்லை. அதனால் நாங்கள் இருவரும் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். என் பெற்றோர், என்னைத் தேடிக் கண்டுபிடித்து ஆணவக்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் எனத் தெரியவந்தது. என் கணவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, எனக்கும், என் கணவருக்கும் என் பெற்றோர், உறவினர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், வளவனூர் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னை வரக்கூடும் என்பதால், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் இரு தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, ``நான் திருமணம் செய்துகொண்டவருடன் செல்லவில்லை. என்னுடைய பெற்றோருடனே செல்கிறேன்" என அந்த இளம்பெண் பிரேமா காவல்துறையினரிடம் தெரிவித்துவிட்டு, தன் வீட்டாருடன் சென்றுவிட்டார்.

திருமணம் செய்துகொண்ட காதலி, பெற்றோருடன் சென்றுவிட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார் வெற்றிவேல். இந்த நிலையில், கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அவர் நேற்று மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்
தே.சிலம்பரசன்

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் வெற்றிவேல் எழுதிவைத்ததாகக் கூறப்படும் கடிதத்தில், ``என் மனைவி பிரேமா பிரிந்து சென்றதால் நான் மிகவும் பாதிப்படைந்தேன். பிரேமா வீட்டார் என்னை ஆள்வைத்து மிரட்டினார்கள். எனவே, நான் தற்கொலை செய்துகொள்கிறேன். என் சாவுக்கு மூன்று நபர்கள்தான் காரணம்" எனச் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயரைக் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மாணவி தற்கொலை!
மாணவி தற்கொலை!

இளைஞர் தற்கொலை செய்துகொண்ட தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வளவனூர் காவல்துறையினர், வெற்றிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வெற்றிவேல் எழுதிவைத்ததாகக் கூறப்படும் கடிதத்தைக் கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.