Published:Updated:

விழுப்புரம்: கணவனைக் கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி - திருமணம் மீறிய உறவு காரணமா?

லியோபால் சடலம்.

விழுப்புரம் மாவட்டத்தில், கணவனை, மனைவியே அடித்துக் கொன்று வீட்டின் அருகே புதைத்த சம்பவம் சோகத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: கணவனைக் கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி - திருமணம் மீறிய உறவு காரணமா?

விழுப்புரம் மாவட்டத்தில், கணவனை, மனைவியே அடித்துக் கொன்று வீட்டின் அருகே புதைத்த சம்பவம் சோகத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
லியோபால் சடலம்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் என்பவருடைய மகன் லியோபால் (33). இவர் சுஜித்ரா மேரி (24) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்தத் தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

லியோபால் வேன் டிரைவராக வேலை பார்த்துவந்திருக்கிறார். லியோபாலின் பெற்றோர், சென்னையில் தங்கி கூலி வேலை செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த மாதம் (பிப்ரவரி) 4-ம் தேதி லியோபாலின் மனைவி சுஜித்ரா மேரி, தன்னுடைய மாமனார் சகாயராஜுக்கு போன் செய்திருக்கிறார். `பாண்டிச்சேரியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற கணவரைக் காணவில்லை' என்று கூறியிருக்கிறார்.

குழந்தைகளுடன் லியோபால், சுஜித்ரா மேரி
குழந்தைகளுடன் லியோபால், சுஜித்ரா மேரி

இதையடுத்து கடந்த மாதம் 21-ம் தேதி தன் மருமகளிடம், `நான் சென்னையிலிருந்து புறப்பட்டு வருகிறேன். நாம் சென்று போலீஸில் புகார் கொடுக்கலாம். நீ தயாராக இரும்மா' என்று கூறியிருக்கிறார் சகாயராஜ். சென்னையிலிருந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது இரண்டு பேரக்குழந்தைகள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்தபோது, `அம்மாவைக் காலையிலிருந்தே காணோம் தாத்தா' என மழலை மாறாத குரலில் கூறியிருக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன் மகன், மருமகளைக் காணவில்லை என்று அன்றைய தினமே விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் சகாயராஜ். வீட்டின் பின்புறத்தில் பள்ளம் தோண்டியதுபோல தடயம் இருப்பதாகவும், அதில் தனக்குச் சந்தேகமாக இருப்பதாகவும் காவலர்களிடம் தெரிவித்திருக்கிறார் சகாயராஜ். அதன்பேரில் நேற்று (03.03.2021) காலை வருவாய்த்துறை அதிகாரிகளுடன், டி.எஸ்.பி நல்லசிவம் தலைமையில், விக்கிரவாண்டி போலீஸ் குழுவினர் முன்னிலையில், அந்த இடம் தோண்டப்பட்டது. அப்போது தலை, கழுத்துப் பகுதிகளில் ரத்த காயங்களுடன் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று சற்று அழுகியநிலையில் கண்டெடுக்கப்பட்டது. அது, தன்னுடைய மகன்தான் என சகாயராஜ் உறுதிப்படுத்தினார். பின்னர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

வீட்டின் அருகே சடலத்தை மீட்க தோண்டப்பட்ட  குழி.
வீட்டின் அருகே சடலத்தை மீட்க தோண்டப்பட்ட குழி.

அதன் பிறகு, போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

பக்கத்து வீட்டில் வசித்துவந்த கல்லூரி மாணவர் ராதாகிருஷ்ணன் (20) எனும் இளைஞருக்கும், சுஜித்ரா மேரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை அறிந்த லியோபால் தன் மனைவி சுஜித்ரா மேரியைக் கண்டித்திருக்கிறார். இதை விரும்பாத மேரி, கணவனைத் தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என முடிவு செய்து, ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து கடந்த மாதம் 4-ம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த லியோபாலைத் தாக்கிக் கொலை செய்திருக்கலாம் என்றும், வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டிப் புதைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது். கணவனைக் காணவில்லை என்று பொய் நாடகமாடியிருக்கிறார் சுஜித்ரா மேரி.

மாமனார், `காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம்' என அழைக்கவே, எங்கே உண்மை வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் கடந்த மாதம் 21-ம் தேதியிலிருந்து சுஜித்ரா மேரி ராதாகிருஷ்ணனுடன் தலைமறைவாகியிருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது. இவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் செந்தில் என்பவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டின் அருகேயுள்ள இளைஞனுடன் ஏற்பட்ட திருமணம் தாண்டிய உறவின் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகத் தெரிகிறது. தலைமறைவாக இருக்கும் சுஜித்ரா மேரியையும் ராதாகிருஷ்ணனையும் தேடிவருகிறோம்" என்றார்.