Published:Updated:

`தாசில்தார்ல இருந்து கலெக்டர் வரை கவனிக்கறாங்க; அவங்கள விட்ருங்க!'- வி.ஏ.ஓ, ஆர்.ஐ வைரல் ஆடியோ

ஆடியோ
ஆடியோ

அவங்க தாசில்தார்ல இருந்து, கலெக்டர் வரை எல்லாரையும் கவனிக்கறாங்க.. அவங்கள விட்ருங்க

``ஏனுங் மணியார்.. காலைல இருந்து கூப்டேன். நீங்க போனே எடுக்கல. ஏன் போன் பண்ணா, திருப்பி கூப்ட மாட்டீங்களா?” என்று ஒரு பெண் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடம் கேள்வி கேட்டபடி தொடங்குகிறது அந்த ஆடியோ..

வ.ஆ: ``அப்பறம், ஏதோ வண்டி புடிச்சு வெச்சுருக்கீங்களாமா?”

கி.நி.அ: ``எந்த வண்டிங்க?”

``நீங்க தான காட்டூர் வி.ஏ.ஓ?”

``ஆமா நான்தான் புடிச்சுருக்கேன்”

``எதுக்கு? இதுவரை தகவலே கொடுக்கலயே?”

``இப்பத்தான் புடிச்சேன். பார்த்துட்டுதான சொல்ல முடியும்?”

``அவங்க எல்லாம் பர்மிட்டோட ஓட்டிட்டு இருக்காங்க”

``பர்மிட் கரெக்டா இல்லங்க”

``அவங்க தாசில்தார்ல இருந்து கலெக்டர் வரை எல்லாரையும் பார்க்கறாங்க. நீங்க எப்படி ரிப்போர்ட் கொடுப்பீங்க?”

``மேம்.. உங்களுக்கு என்ன பார்த்துருக்காங்க?”

``என்னது. வண்டிய புடிக்கற அதிகாரம் உங்களுக்கு இருக்கா மணியகாரே?”

``பர்மிட் தப்பா இருக்கே”

``சரி எப்படி மேலிடத்துக்கு சொல்லுவீங்க? மணியார் புடிச்சுருக்காங்கனு ரிப்போர்ட் கொடுப்பீங்களா?”

``ம்.. பண்ணலாம் மேடம். ஏன் சப் கலெக்டருக்கு கொண்டு போகக் கூடாதா?”

``அப்படி எல்லாம் இல்லயே. ஆர்.ஐ (வருவாய் ஆய்வாளர்) பார்க்கணும்”

``ஏன் வந்து பாருங்க”

``அதெப்படி நானே தெரிஞ்சுக்குட்டு.. நானே வர முடியுமா?”

``கரெக்டானு பார்த்துட்டு தான மேடம் கூப்ட முடியும்?”

``எதுன்னாலும் நீங்க தகவல் சொல்ல மாட்றீங்க”

``இப்பத்தான் பார்த்துட்டு இருக்கோம் மேடம். பார்த்துட்டுதான உங்களுக்கு கூப்டுவோம்”

``அதெல்லாம் தெரியாது… தாசில்தார் கூப்டு சொல்றவங்கள நீங்க விட்ருங்க. அவங்க தாசில்தார்ல இருந்து கலெக்டர் வரை எல்லாரையும் கவனிச்சுட்டு இருக்காங்க”

``அவங்க கவனிச்சுட்டு இருக்காங்களா? பர்மிட் தப்பா இருக்குதே?”

``பர்மிட் தப்பா இருந்தா உங்களுக்கு என்னங்க? மணியகார் சீஸ் பண்ணலாம்னு எங்கங்க இருக்குது?

``அப்ப வேற யார் புடிக்கணும்?

``ஆர்.ஐ-க்குதான் அந்த அதிகாரம் இருக்கு”

``அப்ப வாங்க.. வந்து புடிங்க”

``நீங்க சொல்லி நான் ஏன் புடிக்கணும்? என் ஏரியாவுக்கு வரப்ப நான் பார்த்துக்கறேன்”

``உங்க ஏரியா எதுங்க..? காட்டூரும் உங்க ஏரியாவுலதான இருக்கு?”

``நான் கண்ணுல பார்க்கறப்ப புடிச்சுக்கறேன்.”

``நீங்க எப்படி மேம் கண்ணுல பார்ப்பீங்க? நான்தான் புடிச்சுருக்கேன்ல”

``நீங்க என்னமோ பண்ணுங்க. தாசில்தார் இப்ப லைன்ல வருவாங்க… வைங்க..”

இப்படி முடிகிறது அந்த உரையாடல். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காட்டூர் என்ற பகுதி இருக்கிறது. கார்த்தி என்பவர் அங்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த வாரம், உரிய ஆவணங்களின்றி சென்ற ஒரு மணல் லாரியைப் பிடித்துள்ளார்.

மணல் லாரி
மணல் லாரி

இதையடுத்து, பொங்கலூர் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, கார்த்திக்கு செல்போனில் அழைத்து இப்படி பேசியுள்ளார். அந்த ஆடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, ``விசாரணை நடைபெற்று வருகிறது. அதனால், எதுவும் கூற முடியாது” என்றனர். திருப்பூர் கலெக்டர் க.விஜயகார்த்திகேயனிடம் கேட்டபோது, ``வருவாய் அலுவலர் பேசியிருப்பது, மிகவும் தவறானது.

விஜய கார்த்திகேயன்
விஜய கார்த்திகேயன்

இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு