Published:Updated:

உ.பி: வகுப்பறையில் சிறுவனை மிரட்டி மசாஜ் செய்யவைத்த ஆசிரியை - வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்!

மாணவனை மசாஜ் செய்யவைத்த ஆசிரியர் ( ட்விட்டர் )

உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனை வகுப்பறையிலேயே மசாஜ் செய்யவைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப் பள்ளியில் ஊர்மிளா சிங் என்பவர் உதவி ஆசிரியையாகப் பணிபுரிந்துவருகிறார். இவர், தனது வகுப்பில் படிக்கும் சிறுவன் ஒருவனை அழைத்து, ``எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. அதனால் என்னுடைய கைகளைப் பிடித்துவிடு" என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுவனும் ஆசிரியருக்கு பயந்து, அவரின் கைகளைப் பிடித்து மசாஜ் செய்திருக்கிறார்.

மாணவனை மசாஜ் செய்யவைத்த ஆசிரியர்
மாணவனை மசாஜ் செய்யவைத்த ஆசிரியர்
ட்விட்டர்

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தச் சம்பவம் கடந்த 27-ம் தேதி நடந்திருக்கிறது. வீடியோ வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியதையடுத்து, ஆசிரியரின் செயலுக்குக் கண்டனம் வலுத்தது. அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் பள்ளி மாணவனை மசாஜ் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்திய ஆசிரியை ஊர்மிளா சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கல்வித்துறை அதிகாரிகள், ``சிறுவனை மிரட்டி கைகளைப் பிடித்துவிடச் சொன்ன அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!