Published:Updated:

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபரைத் தாக்கி 16 பவுன் செயினைப் பறித்த கும்பல் - விருதுநகரில் அதிர்ச்சி

ஊரக காவல்

விருதுநகரில் பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் உரிமையாளரைத் தாக்கி 16 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற கொள்ளைக் கும்பலை சிசிடிவி கேமரா காட்சிகளைக்கொண்டு போலீஸார் தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபரைத் தாக்கி 16 பவுன் செயினைப் பறித்த கும்பல் - விருதுநகரில் அதிர்ச்சி

விருதுநகரில் பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் உரிமையாளரைத் தாக்கி 16 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற கொள்ளைக் கும்பலை சிசிடிவி கேமரா காட்சிகளைக்கொண்டு போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
ஊரக காவல்

விருதுநகர் லட்சுமிநகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (72), ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர். இவர் நேற்று பிற்பகலில் பஜாருக்குச் சென்றுவிட்டு மாலையில் தனது டூ வீலரில் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வெள்ளை நிற காரில் மர்மக் கும்பல் ஒன்று அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளது. கந்தசாமி, வீட்டு வாசலில் தனது டூ வீலரை நிறுத்தியவுடன் அவருக்கு பின்னால் காரில் வந்த மர்மக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் பின்பக்கக் கதவு வழியே தாவிக் குதித்து, அவரின் கழுத்தில் கிடந்த 16 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றதாகத் தெரிகிறது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

இது குறித்து ஊரக காவல் நிலையத்தில் கந்தசாமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, வழிப்பறிச் சம்பவம் நடைபெற்ற லட்சுமிநகர் பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், காரிலிருந்து குரங்கு குல்லா அணிந்தபடி மூன்று பேர் இறங்கிவருவதும், அவர்களில் இரண்டுபேர் கந்தசாமியை பிடிக்க மற்றொருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 22 பவுன் செயினை பறித்துள்ளனர். அப்போது கந்தசாமிக்கும்- கொள்ளையர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் தங்க செயினிலிருந்து 6 பவுன் மதிப்புள்ள கொக்கியும், டாலரும் தனியே அறுந்து விழவும், கையில் சிக்கிக்கொண்ட செயினை மட்டும் பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் மூவரும் காரில் தப்பிச்சென்றது கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

மேலும், போலீஸிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக காரின் நம்பர் பிளேட்டை கொள்ளையர்கள் தனியார் கம்பெனி விளம்பர ஸ்டிக்கர் கொண்டு மறைத்திருப்பது தெரியவந்தது. முகமூடிக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற செயின் 16 பவுன் எடைகொண்டது. இதன் மதிப்பு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.