Published:Updated:

பட்டாசு உற்பத்தியில் விதிமீறல்; 174 ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து! - ஆட்சியர் உத்தரவு

பட்டாசு உற்பத்தி ஆலை

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியில் விதிமீறலில் ஈடுபட்ட 174 ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டிருப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

பட்டாசு உற்பத்தியில் விதிமீறல்; 174 ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து! - ஆட்சியர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தியில் விதிமீறலில் ஈடுபட்ட 174 ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டிருப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பட்டாசு உற்பத்தி ஆலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் தாலுகாக்களில் செயல்பட்டுவரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி பேரியம் உப்பு கலந்து தயார்செய்யப்பட்ட பட்டாசுகள், சரவெடி பட்டாசு தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகள் தொடர் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய அதிகாரிகளின் ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு, பட்டாசு உற்பத்தி ஆலைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பட்டாசு உற்பத்தி ஆலை
பட்டாசு உற்பத்தி ஆலை
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த தொடர் ஆய்வுகளில், சிறிய அளவிலான விதிமீறல்களில் ஈடுபட்ட 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின்‌ தீர்ப்பை மீறும் வகையில் விதிமீறல்களில் ஈடுபட்ட 174 பட்டாசு ஆலைகளின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்திப் பணிகள் ஏதும் மேற்கொள்ள முடியாதென்பதால், அந்தந்த ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் பட்டாசு உற்பத்தி உரிமத்தின் மீதான ரத்து ஆணைகள் விலக்கிக்கொள்ளவும் ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், இனிவரும் காலங்களிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும்விதமாக ஆய்வுக் குழுக்களின் மூலமாக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவோர்மீது விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism