Published:Updated:

விருதுநகர் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - தலைமறைவாக இருந்த 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

காவல் நிலையம்

அருப்புக்கோட்டைக்கு அருகே பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இரண்டு பேர் விருதுநகர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

விருதுநகர் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - தலைமறைவாக இருந்த 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

அருப்புக்கோட்டைக்கு அருகே பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இரண்டு பேர் விருதுநகர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Published:Updated:
காவல் நிலையம்

அருப்புக்கோட்டைக்கு அருகே பெண் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி கோவிலாங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் (42), பேரையூர் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (23), ராம்குமார் (20), அழகுராஜ் (19), 17 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேரைக் கைதுசெய்தனர். தலைமறைவான பிரபாகரன், விஜய் ஆகிய இரண்டு பேரைத் தேடிவந்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 354b, 366, 376d, 397, 506ii ஆகிய வழக்கு பிரிவுகளின் கீழ் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை
கூட்டுப் பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

இதில் 17 வயது சிறுவன், காப்பகத்திலும் மற்ற நான்கு பேரும் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிரபாகரன், அவருடைய தம்பி விஜய் ஆகிய இரண்டு பேரும் விருதுநகர்‌ ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட்-2 நீதிபதி நிஷாந்தினி முன்பு சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி நிஷாந்தினி உத்தரவிட்டார்.