Published:Updated:

பப்ஜி நண்பர்களுக்கும் பகிரப்பட்ட வீடியோ... 6 மாதங்களாக வன்கொடுமைக்கு ஆளான பெண் -விருதுநகர் அதிர்ச்சி

கைதுசெய்யப்பட்டவர்கள்

விருதுநகரில் இளம்பெண் ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது, பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரைக் கைதுசெய்துள்ளனா்.

பப்ஜி நண்பர்களுக்கும் பகிரப்பட்ட வீடியோ... 6 மாதங்களாக வன்கொடுமைக்கு ஆளான பெண் -விருதுநகர் அதிர்ச்சி

விருதுநகரில் இளம்பெண் ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது, பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரைக் கைதுசெய்துள்ளனா்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்டவர்கள்

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார்.

இவர், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். இந்நிலையில் விருதுநகர் மேலத்தெருவில் மெடிக்கல் குடோன் நடத்திவரும் ஹரிஹரன் (27) ஃபேஸ்புக் மூலம் இளம்பெண்ணுக்கு ரிக்வஸ்ட் விடுத்துள்ளார். இதை ஏற்று இளம்பெண்ணும் ஹரிஹரனும் ஃபேஸ்புக் வழியே பழகிவந்துள்ளனர். பின்னர் நாளடைவில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலைச் சொல்லி, பல இடங்களுக்கும் ஒன்றாகச் சென்று ஊர் சுற்றியதாகக் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இளம்பெண்ணும் அவரும் ஒன்றாக ஊர் சுற்றிவிட்டு இறுதியாக ஹரிஹரனின் மெடிக்கல் குடோனுக்கு வந்துள்ளனர். அங்கு இளம்பெண்ணும் ஹரிஹரனும் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் ஹரிஹரன் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்து வைத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவைத் தன் நண்பர்களான தொழிலாளி மாடசாமி (37), டிரைவர் பிரவீன் (22), திமுக பிரமுகா் ஜூனைத் அகமது (27) ஆகியோருக்கு போட்டுக் காண்பித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைப் பார்த்த நண்பர்கள் மூவரும், இளம்பெண்ணுடன் தாங்களும் தனிமையில் இருக்க வேண்டுமென இச்சையை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கு ஹரிஹரனும் சம்மதம் தெரிவித்து, தன்னிடமிருந்த வீடியோவை நண்பர்கள் மூன்று பேருக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பியதோடு, இளம்பெண்ணின் செல்போன் எண்ணையும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோவை வைத்துக்கொண்டு இளம்பெண்ணைத் தொடர்புகொண்ட மற்ற மூவரும் தங்களுடனும் தனிமையில் இருக்க வேண்டும் என இளம்பெண்ணைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டி இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளனர்.

ஹரிஹரன் & ஜூனைத் அகமது
ஹரிஹரன் & ஜூனைத் அகமது

இந்த நிலையில் இந்த விஷயம், ஹரிஹரன் உட்பட நான்கு பேருடனும் பப்ஜி விளையாட்டு மூலம் நண்பர்களாக இணைந்த 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கு தெரியவந்துள்ளது. முன்னதாக, ஆபாச வீடியோக்கள், மீம்ஸ்கள் எனப் பலவற்றையும் இவர்கள் எட்டு பேரும் தங்களுக்குள் பகிர்ந்துள்ளனர். அதனடிப்படையில், ஹரிஹரன், இளம்பெண்ணுடன் தனிமையிலிருந்த வீடியோவும் பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கும் செல்போனில் பகிரப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பள்ளி மாணவர்கள், தங்களுக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும் என ஹரிஹரனைக் கேட்டுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த அவர், இளம்பெண்ணின் செல்போன் எண்ணை பள்ளி மாணவர்களிடம் கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களில் ஒருவர், மற்ற மூன்று பேருக்கும் தலைமையாக இருந்து இளம்பெண்ணிடம் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது, 'ஹரிஹரன் உட்பட நான்கு பேருடனும் தனிமையில் இருந்தது எங்களுக்குத் தெரியும். இதை வெளியே சொல்லக் கூடாதென்றால் எங்கள் நான்கு பேருடனும் தனித்தனியே தனிமையில் இருக்க நீ வர வேண்டும்' என சொன்னதாகத் தெரியவருகிறது. `இதற்கு மறுத்தால், ஹரிஹரனுடன் இருந்த வீடியோவை உனது வீட்டுக்கே வந்து, உனது அம்மாவிடம் காண்பிப்பேன்’ என மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் பயந்துபோன அந்த இளம்பெண், பள்ளி மாணவர்களிடம் தன்னை விட்டுவிடுமாறு போனில் அழுது கெஞ்சியுள்ளார். ஆனால், விடாப்பிடியாக இருந்த பள்ளி மாணவர்கள் `எங்களின் ஆசைக்கு இணங்க மறுத்தால் நீ விபரீத விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்' என மீண்டும் மிரட்டி ஆள் இல்லா சமயம், இளம்பெண்ணை அவர் வீட்டுக்கே சென்று வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தனது வாழ்க்கை இப்படி சீரழிந்துவிட்டதே என எண்ணி அப்பெண் தினமும் அழுதுள்ளார். இந்நிலையில், ஹரிஹரன், அவரின் நண்பர்கள், பள்ளி மாணவர்கள் என எட்டு பேரும் தொடர்ந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளனர். வீடியோவை வைத்து மிரட்டி கடந்த ஆறு மாதங்களில், எட்டு பேரும் பலமுறை இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்களின் பாலியல் தொந்தரவால் உடல்நலம் குன்றிய இளம்பெண், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜுனைத் அகமது மற்றும் பள்ளி மாணவர்கள் என எட்டு பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜூனைத் அகமது, விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞர் அணி அமைப்பாளராகப் பதவி வகித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம்பெண்ணின் காதலன் ஹரிஹரனும் 22-வது வார்டு இளைஞரணி உறுப்பினராக உள்ளார்.

பிரவீன்- மாடசாமி
பிரவீன்- மாடசாமி

கைதுசெய்யப்பட்டவர்களிடம் விருதுநகர்‌ துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, எட்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவுசெய்தார். இதைத் தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது நான்கு பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவர்கள் நால்வரும் விருதுநகர் ஜூவனைல் நீதிக் குழும நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மதுரை தெப்பக்குளம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை ஆபாசப் படம் எடுத்து மிரட்டி, எட்டு பேர் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism