Published:Updated:

விருதுநகர்: ரியல் எஸ்டேட் அதிபரிடம் செயின் பறித்த தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் கைது!

லட்சுமிநகர்

விருதுநகரில் பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் உரிமையாளரைத் தாக்கி 16 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற சம்பவத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளைக்கொண்டு வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

விருதுநகர்: ரியல் எஸ்டேட் அதிபரிடம் செயின் பறித்த தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் கைது!

விருதுநகரில் பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் உரிமையாளரைத் தாக்கி 16 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற சம்பவத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளைக்கொண்டு வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
லட்சுமிநகர்

விருதுநகர் லட்சுமிநகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (72), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று முன்தினம் பிற்பகலில் பஜாருக்குச் சென்றுவிட்டு மாலையில் தனது டூ வீலரில் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வெள்ளை நிற காரில் மர்மக் கும்பல் ஒன்று அவரைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது. கந்தசாமி, வீட்டு வாசலில் தனது டூ வீலரை நிறுத்தியவுடன் அவருக்குப் பின்னால் காரில் வந்த மர்மக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் பின்பக்கக் கதவு வழியே தாவிக் குதித்து, அவரின் கழுத்தில் கிடந்த 16 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.

கைது
கைது

இது குறித்து ஊரக காவல் நிலையத்தில் கந்தசாமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, வழிப்பறிச் சம்பவம் நடைபெற்ற லட்சுமிநகர் பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அதில், காரிலிருந்து மங்கி குல்லா அணிந்தபடி மூன்றுல் பேர் இறங்கி வருவதும், அவர்களில் இரண்டு பேர் கந்தசாமியைப் பிடித்துக்கொள்ள, மற்றொருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 22 பவுன் செயினைப் பறித்திருக்கிறார்கள். அப்போது கந்தசாமிக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் தங்க செயினிலிருந்து ஆறு பவுன் மதிப்புள்ள கொக்கியும், டாலரும் தனியே அறுந்து விழவும், கையில் சிக்கிக்கொண்ட செயினை மட்டும் பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் மூவரும் காரில் தப்பிச் சென்றது கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், போலீஸிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக காரின் நம்பர் பிளேட்டை கொள்ளையர்கள் தனியார் கம்பெனி விளம்பர ஸ்டிக்கர்கொண்டு மறைத்திருப்பது தெரியவந்தது. முகமூடிக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற செயின் 16 பவுன் எடைகொண்டது. இதன்மதிப்பு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை
காவல்துறை

தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க நான்கு தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படையினர் நடத்திய விசாரணையில், வழிப்பறிக்குப் பயன்படுத்தப்பட்ட கார், விருதுநகரைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் கம்பெனிக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து டிராவல்ஸ் உரிமையாளரான ராஜ்குமார் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கொடுத்த தகவலின்படி, விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்புப்படை வீரராகப் பணியாற்றிவரும் திருப்பதிதான் வழிப்பறிக்குப் பயன்படுத்திய காரை அன்றைய தினம் வாடகைக்குப் பெற்றுச் சென்றார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பதியைப் பிடித்து விசாரித்ததில், அவர், அவரின் கூட்டாளிகள் கிருஷ்ணமூர்த்தி, அழகர் ஆகியோர் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதும், மேலும் இதில் விருதுநகரைச் சேர்ந்த கருப்பு, சதீஷ், மகாலட்சுமி, ஈஸ்வரன் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து வழிப்பறியில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் பிடித்துவந்த போலீஸார், அதில் திருப்பதி, கிருஷ்ணமூர்த்தி, அழகர் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து வழிப்பறிக்குப் பயன்படுத்திய கார், கந்தசாமியிடமிருந்து பறித்துச் சென்ற 16 பவுன் தங்க செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய மற்றவர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருப்பதி
திருப்பதி

கைதுசெய்யப்பட்டவர்களில் தீயணைப்பு வீரர் திருப்பதி, இது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இது குறித்து காவல்துறை அதிகாரியிடம் பேசினோம். "தீயணைப்பு வீரர் திருப்பதி, சொந்தமாகத் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் வைத்து கடைகள் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் நடத்திவருகிறார். இவர்மீது துறைரீதியாக ஏற்கெனவே மோசடிப் புகார்கள் உள்ளன. சமீபத்தில், தீயணைப்பு நிலையத்தில் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த உயரதிகாரியின் கையெழுத்து சீலை அவரின் ஒப்புதல் இல்லாமல் அவரின் அறையிலிருந்து திருடி மோசடிக்குப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், துறைரீதியான விசாரணையும் அவர்மீது நடத்தப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி தனது கூட்டாளிகளுடன், ரியல் எஸ்டேட் அதிபரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்" என்றார்.