விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை பகுதியைச் சேர்ந்த தம்பதி முருகேசன் - ஈஸ்வரி. இவர்களின் மகன் தினேஷ் (17). ஆர்.ஆர்.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். தமிழக அரசு அறிவித்தபடி இன்று முதல் தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு ஆரம்பமாகவிருக்கிறது. இந்த நிலையில் தினேஷ் அவருடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், ``முருகேசன் - ஈஸ்வரி தம்பதியர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்காக, காலை உறவினர்களின் ஊரான பேராவூரணிக்குச் சென்றிருக்கிறார்கள்.

காலையில தினேஷோட தாத்தா வேலுச்சாமி மட்டும் வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறார். வீட்டுக்கு வந்து பேரனைப் பார்த்தவரு வெளியே போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போயிருக்காரு. ரெண்டு மணி நேரம் கழிச்சு அவர் வீட்டுக்குத் திரும்பி வந்தப்போ, வீடு திறந்து கிடந்திருக்கு. பேரனைக் காணோம்னு அக்கம் பக்கம் தேடிப்பார்த்தவரு, வீட்டுக்குள்ள வந்தப்போ ஒரு ரூம் மட்டும் உள்பக்கமா தாழ்ப்பாள் போட்டிருந்திருக்கு. ரொம்ப நேரமா கதவு தட்டிப் பார்த்தும் கதவு திறக்காததால சந்தேகப்பட்டு பக்கத்து வீட்டு ஆளுகளைக் கூட்டிட்டு வந்து கதவை உடைச்சு உள்ள போயிப் பார்த்திருக்காங்க. அந்த ரூமுக்குள்ள மாணவர் தினேஷ், அவங்க அம்மாவோட சேலையில தூக்குப்போட்டு இறந்து கிடந்திருக்காரு.
இது சம்பந்தமா, தகவல் கிடைச்சதும் விசாரணை நடத்தினோம். முதற்கட்ட விசாரணையில வீட்டில் தனியா இருந்த மாணவர் தினேஷ், பரீட்சையை நினைச்சு ரொம்ப பயத்துல இருக்காருன்னு தெரியவந்துச்சு. தன்னால ஒழுங்கா பரீட்சை எழுத முடியாதுன்னு ரொம்ப மன உளைச்சல்ல தற்கொலை செஞ்சுக்கிட்டாருனு தெரிஞ்சுது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவெச்சிருக்கோம். அவருடைய வீட்டில் சோதனை செஞ்சப்போ தினேஷ் தன் கைப்பட எழுதிவெச்சிருந்த லெட்டர் கிடைச்சுது. அதுல, ``எங்க அப்பா, அம்மா என் மேல நிறைய நம்பிக்கைவெச்சிருக்காங்க. ஆனா அந்த நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியாதுன்னு தோணுது. என்னால சரியா பரீட்சையை எழுத முடியாது. என்னை மன்னிச்சிடுங்க. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை" அப்படின்னு எழுதியிருந்துச்சு. அந்த லெட்டரையும் கைப்பற்றியிருக்கோம். இது சம்பந்தமா வழக்கு பதிவுசெய்து மேற்கொண்டு விசாரணை நடத்திட்டுவர்றோம்" என்றார்.

இந்நிலையில் பொதுத்தேர்வை மாணவர்கள், மன தைரியத்துடன் எதிர்கொள்வது குறித்து மனநல மருத்துவர் எஸ்.சிவசைலத்திடம் பேசினோம். "முதல்ல மாணவர்கள் பரீட்சையை நினைச்சு பயப்படக் கூடாது. மாணவர்களை தைரியம் உள்ளவர்களா வளர்ப்பதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ரெண்டு பேருமே மாணவர்களை நிறைய பாராட்டணும். அவங்களை அடிக்கடி உற்சாகப்படுத்துற மாதிரி நாம ஏதாவது செய்யணும். ஒரு விஷயம் தப்பா போனால்கூட அவங்களைப் பாராட்டுறது மூலமா அவங்களுக்கு மனசளவுல ஏற்படுற எதிர்மறையான எண்ணங்கள் மறைஞ்சுபோயிடும். அதனால, கிடைக்கிற தைரியம் தப்பா செஞ்ச விஷயத்தைச் சரிபண்ணக்கூடிய பாசிட்டிவ் எண்ணத்தை உளளே துளிர்க்கவைக்கும்.
தமிழக அரசு கல்வி முறையில பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கு. மாணவர்களின் கல்வி பயிலும் திறனையும் தேர்வையும் ரொம்ப எளிமையாக்கிருக்காங்க. முதல் வாய்ப்பை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்த முடியாமப் போனாக்கூட இரண்டாவது வாய்ப்பு வழங்க அரசாங்கம் வழிவகுத்திருக்கு.
இதை அவங்க மறந்திடக் கூடாது. மாணவர்களுக்குக் கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மனவலிமையும் ரொம்ப முக்கியம். சின்னச் சின்ன ஏமாற்றம், தோல்விகளை தாங்க முடியாத அளவுக்கு மாணவர்கள் ரொம்ப வீக்கா இருக்கக் கூடாது. அவங்களை தைரியமுள்ளவர்களா வளர்க்கிறதுல அவங்களோட பெற்றோர் பங்கு ரொம்ப முக்கியம். ஏன்னா, ஆரம்பத்துல நாம எப்படியான அடிப்படை தைரியத்தை மனசுக்குள்ள விதைக்கிறோமோ அதுதான் பிள்ளைங்க வளர வளர உள்ளிருந்து வளரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதனால், அவங்களுக்கு அப்பப்போ சின்னச் சின்ன ஏமாற்றங்களை கத்துக்கொடுக்கணும். தோல்விகளை ஏத்துக்குற பக்குவத்தைச் சொல்லித் தரணும். குறிப்பா, பெற்றோர்கள் அவங்களோட வாழ்க்கை ஆரம்பகட்டத்துல பட்ட அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், சந்தோஷம், குடும்ப உறவு, நட்பு, துரோகம் இதையெல்லாம் மனசுவிட்டு பிள்ளைங்ககூட பேசலாம். அதுமாதிரி, பெற்றோர்களோட மொத்த எதிர்பார்ப்பையும் பிள்ளைங்க மேல இறக்கிடக் கூடாது. பிள்ளைகளைத் தனியா எதையும் சிந்திக்கிற மாதிரி சூழ்நிலையை உருவாக்கக் கூடாது. முடிந்தவரை பெற்றோர்கள் கூட இருந்து கலகலனு பேசினாலே மாணவர்களுக்குத் தேவையற்ற நினைப்புகள் வர்றதைத் தவிர்க்கலாம்.

குழந்தைங்க 'மூட் அவுட்டா' இருந்தா கட்டாயம் அவங்களை பக்கத்துல எங்கயாவது வெளியா கூட்டிட்டு போயி 'சியர்அப்' பண்ணணும். இதெல்லாம் அவங்களுக்கான எதிர்மறை எண்ணங்ளை மாத்தும். ரொம்ப ஃப்ரீயா அவங்களைப் படிக்கவிடணும். டைம் டேபிள்படி, பிரஷர் பண்றதும் அவங்களுக்கு ஒருவித மன அழுத்தத்தைத் தரும். ஆகவே, வீட்ல பிரீ எஜுகேஷன் அவங்களுக்கு ஆரோக்கியமான மனநிலைய உண்டாக்கும்.
தேர்வு சமயத்துல அவங்களுக்காக டைம் ஒதுக்கி பெற்றோர்களும் பசங்ககூட இருந்து புத்தகம் படிக்கலாம். டயர்டு ஆகுறப்போ சின்னதா ஒரு 'பிரேக்’ அல்லது ஒரு 'வாக்' போலாம். கூடவே, பாட்டு கேட்குறது, நடனமாடுறது இதெல்லாம் புது என்ர்ஜியை அவங்களுக்கு உண்டாக்கும். மனசு, மைண்ட் ரெண்டுமே வேறுபடாம ரிலாக்ஸா இருந்தாலே பரீட்சையெல்லாம் ரொம்ப ஈசியா பாஸ் பண்ணலாம்" என்றார்.