Published:Updated:

விருதுநகரில் குடிபோதையில் லாரியை நிறுத்தாமல் சென்ற கேரள இளைஞர்! -ரூ.10,750 அபராதம் விதித்த போலீஸார்

ரூ.10,750 அபராதம் விதித்தது விருதுநகர் காவல்துறை

அபராத ரசீது
அபராத ரசீது ( ஆர்.எம்.முத்துராஜ் )

குடிபோதையில் வேகமாக ஓட்டி வந்த லாரியை நிறுத்தாமல் சென்ற கேரள இளைஞருக்கு விருதுநகர் காவல்துறையினர் ரூ.10,750 அபராதம் விதித்தனர்.

`வித்தியாசம் தெரியல; பில் புக் மாறிருச்சு'- மாட்டுவண்டிக்கு அபராதம் விதித்து சர்ச்சையான போலீஸ்!

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கம் அருகே சூலக்கரை காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விருதுநகரிலிருந்து சாத்தூர் நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. காவல்துறையினர் அந்த லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் வேகமாகச் சென்றதால் காவல்துறையினரும் அதனை விரட்டிச் சென்றனர். அசுர வேகத்தில் சென்ற லாரியை விரட்டிச் சென்று பிடித்து நிறுத்தினர்.

அப்போது கன்டெய்னரில் இருந்த 2 பேரும் கீழே குதித்தனர். சாலையோரத்தில் இருந்த தடுப்பு வேலியில் குதித்ததால் 2 பேருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பரூக் காலேஜ் பகுதியைச் சேர்ந்த சாருக் தையல்தோடி (24) என்பதும், அவருடன் வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சாகுல்ஹமீது (25) என்பதும் தெரியவந்தது.

அபராத ரசீது
அபராத ரசீது
ஆர்.எம்.முத்துராஜ்

குடிபோதையில் லாரி ஓட்டி வந்ததால் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காகவே லாரியை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகவும், இதற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளையும் இடித்துத் தள்ளியதாக தெரிவித்தனர். எனவே, குடிபோதையில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும், லாரியை நிறுத்தாமலும் சென்ற கன்டெய்னர் ஓட்டுநர் சாருக் தையல்தோடிக்கு ரூ.10,750 மற்றும் அவருடன் இருந்த சாகுல் அமீதுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் விருதுநகர் 2-வது நடுவர் நீதிமன்றத்தில் அபராதத் தொகையைச் செலுத்தினர்.