Published:Updated:

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் 4 பேருக்கு ஜாமீன்

மருத்துவப் பரிசோதனை நடந்த ஆய்வகம்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுவர்கள் உட்பட கைதுசெய்யப்பட்ட எட்டுப் பேருக்கும் திடீர் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுவர்கள் நான்கு பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் 4 பேருக்கு ஜாமீன்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுவர்கள் உட்பட கைதுசெய்யப்பட்ட எட்டுப் பேருக்கும் திடீர் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுவர்கள் நான்கு பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

Published:Updated:
மருத்துவப் பரிசோதனை நடந்த ஆய்வகம்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஹரிஹரன் (27), ஜுனைத் அகமது (27), மாடசாமி (37), பிரவீன் (22) ஆகிய நான்கு பேரை கடந்த 29-ம் தேதி ஆறு நாள்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது. தொடர்ந்து கூர்நோக்கு இல்லத்தில் உள்ள நான்கு பள்ளி மாணவர்களிடம் கடந்த 1-ம் தேதி நான்கு மணி நேரம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவுசெய்தது. எட்டுப் பேருடைய சிபிசிஐடி காவல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நான்கு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமைத் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18-ம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன்
ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன்

இந்த நிலையில் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட எட்டுப் பேருக்கும் விந்தணு பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீஸார் விருதுநகரில் உள்ள இளையோர் நீதி குழுமத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு அனுமதி கிடைத்தன்பேரில் ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் நான்கு பள்ளிச் சிறுவர்கள் உட்பட எட்டுப் பேரையும் மதுரையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீஸார் விருதுநகருக்கு அழைத்துவந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து அவர்கள் நண்பகல் 12 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்துக்கு அழைத்துவரப்பட்டு விந்தணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நான்கு பேருக்கும் பரிசோதனை முடிந்து மாலையில் அவர்கள் மதுரைச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பள்ளிச் சிறுவர்கள் நான்கு பேருக்கும் தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. இரவு 9:30 மணிக்கு பரிசோதனை நிறைவுபெற்று பள்ளிச் சிறுவர்களும் கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மருத்துவப் பரிசோதனை நடந்த ஆய்வகம்
மருத்துவப் பரிசோதனை நடந்த ஆய்வகம்

இந்நிலையில், காவல்துறையினர் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதன் அடிப்படையில் பள்ளிச் சிறுவர்கள் நான்கு பேருக்கும் ஜாமீன் கேட்டு விருதுநகர் இளையோர் நீதிமன்றத்தில் அவர்களின் பெற்றோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதி மருதுபாண்டி, சிறுவர்கள் நான்கு பேரும் வாரம் ஒரு முறை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism