Published:Updated:

`முழுமையாக நம்பினோம்; அவமானத்தை தேடித்தந்துவிட்டாள்!'- சீரியல் கில்லர் ஜோலியின் தந்தை ஜோசப் கண்ணீர்

``ஜோலிக்கு நாங்கள் எந்த உதவியும் செய்யப்போவதில்லை'' என அவரின் தந்தை ஜோசப் தெரிவித்துள்ளார்.

ஜோலி
ஜோலி

கேரள சீரியல் கொலையில் ஜோலி என்ற 47 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரம், சொத்து, ஆசை போன்ற காரணங்களுக்காக தனது குடும்ப உறவுகள் 6 பேரை விஷம் வைத்துக் கொலை செய்துள்ளார். வீட்டில் அதிகாரம் கிடைக்க 2002-ல் மாமியார் அன்னம்மாவை விஷம் வைத்துக் கொலை செய்கிறார். அடுத்து சொத்துக்காக மாமனார். சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுத்த கணவர். இந்த மரணங்களில் சந்தேகம் எழுப்பிய உறவினர் மேத்தீவ். உறவினர் சாஜூ மீது கொண்ட காதலால் அவரின் மனைவி மற்றும் 2 வயது மகளைக் கொலை செய்தார். 17 வருட இடைவெளியில் 6 கொலைகளை செய்தார். ஜோலியின் கணவரின் சகோதர் ரோஜோ அளித்த புகாரின் பேரில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

`முழுமையாக நம்பினோம்; அவமானத்தை தேடித்தந்துவிட்டாள்!'-  சீரியல் கில்லர் ஜோலியின் தந்தை ஜோசப் கண்ணீர்

ஜோலிக்கு உதவியதாக நகைக்கடையில் பணியாற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஜோலியின் இரண்டாவது கணவர் சாஜூ அடுத்து கைது செய்யப்பட்டார். கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஜோலி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். ஜோலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர். ஜோலிக்கு எதிராக ஆக்‌ரோஷமாகக் கூச்சலிட்டனர். பெண் காவலர்களின் பாதுகாப்புடன் ஜோலி நீதிமன்றத்துக்குள் அழைத்துச்செல்லப்பட்டார். ஜோலிக்காக வாதாட கோழிக்கோடைச் சேர்ந்த உள்ளூர் வக்கீல்கள் மறுத்துவிட்டனர். ஆளூர் என்ற வழக்கறிஞர் ஜோலிக்காக வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த கோழிக்கோடு நீதிமன்றம், ஜோலியை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டதோடு, வரும் 16-ம் ஆஜர்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.

அரசியல் கட்சித் தலைவரை சந்தித்த ஜோலி; 2-வது கணவரின் தலையீடு! -கேரள சீரியல் கொலையில் திடீர் திருப்பம்

இடிக்கி மாவட்டம்தான் ஜோலியின் சொந்த ஊர். கட்டப்பனாவைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் மகள்தான் இந்த ஜோலி. இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசிய ஜோலியின் தந்தை ஜோசப், ``எங்கள் குடும்பத்துக்கு அவமானத்தை தேடித்தந்துவிட்டார். நாங்கள் எந்த உதவியும் செய்வதாக இல்லை. அவர் அப்பாவியாக இருந்தால் தன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று நிரூபித்து வெளியில் வரட்டும். இதுதொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம். அவருக்குச் சில பொருளாதாரச் சிக்கல் இருந்தது எங்களுக்குத் தெரியும். பொருளாதார ரீதியாக நிறைய உதவிகளைச் செய்துள்ளோம். ஜோலியின் மூத்த மகன் வட இந்தியாவில் படிப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்தோம். நாங்கள் அவளை முழுமையாக நம்பினோம். அவள் எங்களை ஏமாற்றிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

`முழுமையாக நம்பினோம்; அவமானத்தை தேடித்தந்துவிட்டாள்!'-  சீரியல் கில்லர் ஜோலியின் தந்தை ஜோசப் கண்ணீர்

இந்த வழக்கில் ஜோலி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நகைக்கடை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் விசாரணையில், வீட்டில் எலிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது எனக் கூறி தான் ஜோலி சயனைடு வாங்கியதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.