Published:Updated:

மேற்கு வங்கத்தை உலுக்கிய பிர்பூம் கலவரம்... சிபிஐ கட்டுப்பாட்டிலிருந்த முக்கியக் குற்றவாளி தற்கொலை!

தற்கொலை

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச்சில் நடந்த பிர்பூம் கலவரத்தில் முக்கியக் குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டு, சி.பி.ஐ கட்டுப்பாட்டிலிருந்த லாலன் ஷேக் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

மேற்கு வங்கத்தை உலுக்கிய பிர்பூம் கலவரம்... சிபிஐ கட்டுப்பாட்டிலிருந்த முக்கியக் குற்றவாளி தற்கொலை!

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச்சில் நடந்த பிர்பூம் கலவரத்தில் முக்கியக் குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டு, சி.பி.ஐ கட்டுப்பாட்டிலிருந்த லாலன் ஷேக் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
தற்கொலை

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மாதம், அந்தக் கட்சியின் பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, பிர்பூம் பகுதியின் பாக்டுய் கிராமத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில், அடையாளம் தெரியாத கும்பல் அங்கிருந்த வீடுகளுக்குத் தீ வைத்ததில், இரண்டு குழந்தைகள், ஆறு பெண்கள் உட்பட மொத்தம் பத்துப் பேர் உயிரிழந்தனர்.

பிர்பூம் கலவரம்
பிர்பூம் கலவரம்

பின்னர் இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக ஜார்க்கண்ட் மாநிலம், பாகூரில் தலைமறைவிலிருந்த லாலன் ஷேக் என்பவர் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் சி.பி.ஐ கட்டுப்பாட்டிலிருந்த லாலன் ஷேக், திடீரென நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

சிபிஐ
சிபிஐ
ட்விட்டர்

அதையடுத்து சி.பி.ஐ அதிகாரிகள் லாலன் ஷேக்கின் உடலை மருத்துவப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரியவரவே, கோபமடைந்த குடும்பத்தினர் மேற்கு வங்க மாநிலம், ராம்பூர்ஹாட் நகருக்கு அருகே, சி.பி.ஐ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மாவட்டத்திலிருந்து மூத்த போலீஸ் அதிகாரிகள் சி.பி.ஐ அலுவலகத்துக்கு விசாரணைக்காக வந்தனர். இதனால் மீண்டும் பிர்பூம் கலவரம் தொடர்பான வழக்கில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.