Published:Updated:

டெல்லியில் இளம்பெண் கொலைசெய்யப்பட்ட தினத்தன்று நடந்தது என்ன?! - விசாரணையில் வெளியான தகவல்கள்

பூனாவாலாப் - ஷ்ரத்தா

டெல்லியில் இளம்பெண் 35 துண்டுகளாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட தினத்தன்று இருவருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது தெரியவந்திருக்கிறது.

டெல்லியில் இளம்பெண் கொலைசெய்யப்பட்ட தினத்தன்று நடந்தது என்ன?! - விசாரணையில் வெளியான தகவல்கள்

டெல்லியில் இளம்பெண் 35 துண்டுகளாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட தினத்தன்று இருவருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது தெரியவந்திருக்கிறது.

Published:Updated:
பூனாவாலாப் - ஷ்ரத்தா

மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் டெல்லியில் கடந்த மே மாதம் அவரின் காதலனால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலையைச் செய்த ஷ்ரத்தாவின் காதலன் அஃப்தாப் பூனாவாலா, ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, டெல்லியைச் சுற்றி வீசியதாக டெல்லி போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். போலீஸாரின் விசாரணையில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ``மே 18-ம் தேதி, கொலை நடந்த தினத்தன்று இரவு 8 மணிக்கு வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வீட்டுக்குவேண்டிய பொருள்களை வாங்க யார் பணம் கொடுப்பது என்பதில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சண்டை பெரிய அளவில் முற்றியதால் ஷ்ரத்தாவைக் கீழே தள்ளி, கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார் பூனாவாலா. ஏற்கெனவே அவர்களுக்குள் பிரச்னை இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இளம்பெண் கொலைசெய்யப்பட்ட தினத்தன்று நடந்தது என்ன?! - விசாரணையில் வெளியான தகவல்கள்

அன்று இரவு முழுவதும் உடல், கொலைசெய்யப்பட்ட அறையில் கிடந்தது. காலையில்தான் உடலை வெட்டுவதற்கான கத்தி, பிளாஸ்டிக் கவர், புதிய பிரிட்ஜ் போன்றவற்றை வாங்கி வந்திருக்கிறார். ஏற்கெனவே சமையல்கலை நிபுணரான பூனாவாலா எப்படி உடலை வெட்டவேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தார். ஷ்ரத்தாவின் உடலை வெட்டி, ஒவ்வொரு பிளாஸ்டிக் கவரிலும் போட்டு ஃபிரிட்ஜில் எடுத்து அடுக்கி வைத்தார். அதன் பிறகு ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் போட்டிருக்கிறார். அவ்வாறு போடப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் இருந்த சில உடல் பகுதிகளை போலீஸார் பூனாவாலாவை அழைத்துச் சென்று கைப்பற்றியிருக்கின்றனர்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் தனியாக வீடு எடுத்து வசித்தபோதே பூனாவாலாவுக்கும், ஷ்ரத்தாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. இருவருமே ஒருவர்மீது ஒருவர் சந்தேகப்பட்டுள்ளனர். எனவேதான் அடிக்கடி சண்டை நடந்ததாக இருவரின் நண்பர்களும் தெரிவித்தனர். அதோடு ஷ்ரத்தா, பூனாவாலா இருவரின் வீட்டிலும் அவர்களின் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவேதான் இருவரும் டெல்லிக்குச் சென்றுள்ளனர். முதலில் இமாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து டெல்லிக்கு வந்த சில நாள்களிலேயே இந்தக் கொலை நடந்திருக்கிறது. டெல்லிக்குச் சென்ற பிறகு சில நாள்கள் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்துள்ளனர். அதன் பிறகுதான் வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர். ஷ்ரத்தாவைக் கொலைசெய்யப் பயன்படுத்திய கத்தி, ஷ்ரத்தாவின் ஆடைகள், மொபைல் போன், தலை போன்ற எதுவும் இதுவரை போலீஸாரிடம் சிக்கவில்லை

10 நாள்கள் கொலையை தள்ளிப்போட்ட பூனாவாலா

போலீஸாரின் விசாரணையில் மே 18-ம் தேதிக்கு முன்பு 10 நாள்களுக்கு முன்பே கொலைசெய்யத் திட்டமிட்டதாக பூனாவாலா தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் இளம்பெண் கொலைசெய்யப்பட்ட தினத்தன்று நடந்தது என்ன?! - விசாரணையில் வெளியான தகவல்கள்

கொலை நடந்த தினத்துக்கு 10 நாள்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்திருக்கிறது. அன்றே கழுத்தை நெரித்துக் கொலைசெய்யத் திட்டமிட்டதாக பூனாவாலா தெரிவித்திருக்கிறார். ஆனால் கொலைசெய்யத் திட்டமிட்டபோது, திடீரென உணர்ச்சிவசப்பட்டு ஷ்ரத்தா அழுததாகவும், எனவே கொலைசெய்யும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். பூனாவாலா வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி போனில் பேசுவதாகவும், அந்தப் பெண்ணுடன் தொடர்புவைத்திருப்பதாகவும் ஷ்ரத்தா சந்தேகப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த பிறகும் ஷ்ரத்தாவின் முகத்தை தினமும் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் முன்பு பூனாவாலா கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவர் முன்பும் ஷ்ரத்தா உயிரோடு இல்லை என்று பூனாவாலா தெரிவித்தார். விகாஸ் தன் மகளுடன் ஓர் ஆண்டுக்கும் மேலாக எந்தவிதத் தொடர்பிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.