Published:Updated:

ஹ்ரித்திக் Vs கங்கனா: 2016-ல் போடப்பட்ட FIR... டெலிட் செய்யப்பட்ட இ-மெயில்கள் - என்ன பிரச்னை?

கங்கனா Vs ஹ்ரித்திக்
கங்கனா Vs ஹ்ரித்திக் ( twitter images )

``கங்கனாவைத் தொடர்புகொள்ள ஹ்ரித்திக்கே ஒரு புதிய மெயில் ஐடி-யை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அவருடைய (ஹ்ரித்திக்) நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ள இவ்வாறு செய்திருக்கிறார்.’’ கங்கனா-ஹ்ரித்திக் இடையே என்ன பிரச்னை?

கடந்த சில மாதங்களாகவே சோஷியல் மீடியா மூலம் கருத்துகளைப் பதிவிட்டு, பல சர்ச்சைகளில் சிக்கிவருபவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தற்போது மீண்டுமொரு விஷயத்தின் மூலம் பாலிவுட்டின் முக்கியச் செய்திகளில் இடம்பெறத் தொடங்கியிருக்கிறார். கங்கனாவோடு சேர்ந்து பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் பெயரும் செய்திகளில் உச்சரிக்கப்பட்டுவருகிறது. ஹ்ரித்திக், கங்கனா இருவரும் ஏன் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, இவர்களின் முன்கதையைப் பார்த்துவிடலாம்.

கங்கனா-ஹ்ரித்திக் முன்கதை!

2010-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான `கைட்ஸ்' படத்தில் கங்கனாவும் ஹ்ரித்திக்கும் முதன்முதலாகச் சேர்ந்து நடித்தனர். அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு வெளியான `க்ரிஷ் 3' படத்திலும் இவர்கள் இணைந்து நடித்திருந்தனர். அந்தச் சமயத்தில் கங்கனாவுக்கும் ஹ்ரித்திக் ரோஷனுக்கும் காதல் மலர்ந்ததாகச் செய்திகள் வெளியாயின. 2013-ம் ஆண்டு ஹ்ரித்திக்கும் அவரது மனைவி சுசேன் கானும் (Sussanne Khan) பிரிந்து வாழ முடிவு செய்தனர். அதற்குக் காரணம் கங்கனாவுடனான காதல்தான் என்று சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆனால், ஹ்ரித்திக்கும் கங்கனாவும் இது குறித்துப் பொது வெளியில் எதுவும் பேசவில்லை

ஹ்ரித்திக்
ஹ்ரித்திக்
Twitter/@sussannekroshan
Vikatan

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார் கங்கனா. அந்த நேர்காணலில், `சில்லி EX' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். அதாவது, `தனது முன்னாள் காதலர் புத்தி கெட்டவர்' என்ற பொருள்படும்படி பேசியிருந்தார் கங்கனா. ஆனால், ஹ்ரித்திக்கின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இந்தச் சம்பவம் நடந்த அன்றே தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனாவைத் தான் காதலிக்கவேயில்லை என்று பொருள்படும்படி ட்வீட் செய்த ஹ்ரித்திக், ``கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும். நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை என்பதைப் பத்திரிகையாளர்கள் முன்பு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்மீது அவதூறு வழக்கு பதியப்படும்'' என்று வக்கீல் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பினார்.

இதற்கு கங்கனா, ``நான் ஒன்றும் அறிவில்லாத சின்னப் பெண் இல்லை. மன்னிப்புக் கேட்க முடியாது. ஹ்ரித்திக், தனது நோட்டீஸைத் திரும்பப் பெறவில்லையென்றால் அவர்மீது கிரிமினல் வழக்கு பதியப்படும்'' என்று பதில் நோட்டீஸ் அனுப்பினார்.

கங்கனா
கங்கனா
`சுஷாந்த் கொலைக்கு இதுதான் காரணம்... பாலிவுட்டில் போதைப் பழக்கம்!' - கங்கனா பகீர் தகவல்

இதைத் தொடர்ந்து 2013-14 காலகட்டத்தில் கங்கனாவின் இ-மெயில் ஐடியிலிருந்து தனக்கு எண்ணற்ற மின்னஞ்சல்கள் வந்ததாகவும், அதனால், தான் மனதளவில் பாதிப்படைந்துள்ளதாகவும் மும்பை காவல்துறையில் ஹ்ரித்திக் ரோஷன் புகாரளித்திருந்தார். 2016-ம் ஆண்டு மத்தியில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக அந்தச் சமயத்தில் பேட்டியளித்த கங்கனாவின் வழக்கறிஞர்,

''ஹ்ரித்திக்கின் விவாகரத்து வழக்கு இன்னும் முடிவடையாமல் இருப்பதால், கங்கனாவைத் தொடர்புகொள்ள ஹ்ரித்திக்கே ஒரு புதிய மெயில் ஐடி-யை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அவருடைய (ஹ்ரித்திக்) நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ள இவ்வாறு செய்திருக்கிறார். மேலும், அந்த மெயில் ஐடி-யை தற்போது ஹேக் செய்து, அவர் கங்கனாவுக்கு அனுப்பிய மெயில்கள் அனைத்தையும் நீக்கியிருக்கிறார்.''
கங்கனாவின் வழக்கறிஞர்

மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட வழக்கு!

சைபர் கிரைம் பிரிவினரால் விசாரிக்கப்பட்டுவந்த இந்த வழக்கில், நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று ஹ்ரித்திக்கின் வழக்கறிஞர் சமீபத்தில் மும்பை காவல்துறைக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு சைபர் கிரைம் பிரிவிலிருந்து குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கங்கனா, இது குறித்த செய்தியை ரீ ட்வீட் செய்து, ``அவருடைய (ஹ்ரித்திக்) கண்ணீர்க் கதையை மீண்டும் தொடங்கிவிட்டார். காதல் முறிவு, திருமண முறிவு ஏற்பட்டு பல ஆண்டுகள் கழிந்த பின்னரும், அவர் இதிலிருந்து கடந்துபோக மறுக்கிறார். எந்தப் பெண்ணையும் டேட் (Date) செய்ய மறுக்கிறார். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில நம்பிக்கைகள் ஏற்பட, நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டிருக்கும்போது, மீண்டும் அதே நாடகத்தை ஹ்ரித்திக் தொடங்குகிறார். இந்தச் சின்ன விஷயத்துக்காக அழுவதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?" என்று பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு பாலிவுட்டில் பேசுபொருளாகியிருக்கிறது.

முடித்துவைக்கப்பட்ட வழக்கு?

ஹ்ரித்திக் பதிவு செய்திருந்த வழக்கு 2016-ம் ஆண்டே முடித்து வைக்கப்பட்டதாக சில ஆங்கிலச் செய்தி ஊடகங்கள், அந்தச் சமயத்தில் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தச் செய்திகளில், ``எங்களால் அந்த மெயில் ஐடி-யை ட்ராக் செய்ய முடியவில்லை. காரணம், அந்த மெயில்கள் அனுப்பப்பட்ட சர்வர் அமெரிக்காவில் இருப்பதாகத் தெரிகிறது. அந்த மெயில் ஐடி-யை இப்போது யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை'' என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கங்கனா-ஹ்ரித்திக்
கங்கனா-ஹ்ரித்திக்

இது குறித்து கங்கனாவின் வழக்கறிஞர், ``காவல்துறையினர் நடத்திய முழுமையான விசாரணைக்குப் பின்னர், ஆதாரங்கள் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஹ்ரித்திக் கூறியபடி எந்த ஒரு மோசடியையும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கங்கனா எப்போதுமே, தான் மோசடி செய்பவர் இல்லை என்பதைத் தொடர்ந்து நிலைநாட்டிவருகிறார்'' என்று பேசியதாகவும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஹ்ரித்திக் ரோஷன்
ஹ்ரித்திக் ரோஷன்
இஸ்ரேல்: இஸ்லாமிய நாடுகளுடனான பிரச்னைகள் எப்படித் தீர்ந்தன - அதில் ட்ரம்ப்பின் பங்கு என்ன?
இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தற்போது ஷேர் செய்து, ``முடித்துவைக்கப்பட்ட வழக்கில் முன்னேற்றம் இல்லை என்று ஹ்ரித்திக்கின் வழக்கறிஞர் கூறுவது விநோதமாக உள்ளது'' என கங்கனா ஆதரவாளர்கள் சிலர் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். தோண்டியெடுக்கப்பட்டுள்ள இந்தப் பழைய வழக்கின் மூலம், 2016-க்கு பிறகு பாலிவுட்டில் மீண்டும் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது `கங்கனா-ஹ்ரித்திக் வார்!’
அடுத்த கட்டுரைக்கு