Published:Updated:

திருமணமான 15 நாள்களில் புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை‌! - சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்

கொலையான பிரபாகரன்

பிறந்தநாள் விழாவுக்கு பிரபாகரன் தரப்பு மது அருந்தியபோது, அப்பகுதியில் ஜம்புலியம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் தரப்பும் மது அருந்தியுள்ளனர். பிறந்தநாள் விழா கொண்டாடியவர்கள் அதிக கூச்சலிட்டுள்ளனர்.

திருமணமான 15 நாள்களில் புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை‌! - சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் விழாவுக்கு பிரபாகரன் தரப்பு மது அருந்தியபோது, அப்பகுதியில் ஜம்புலியம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் தரப்பும் மது அருந்தியுள்ளனர். பிறந்தநாள் விழா கொண்டாடியவர்கள் அதிக கூச்சலிட்டுள்ளனர்.

Published:Updated:
கொலையான பிரபாகரன்

திண்டுக்கல், அனுமந்தநகர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரபாகரன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்துள்ளது.

காவல் நிலையம்
காவல் நிலையம்

இந்த நிலையில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகேயுள்ள ஏர்போர்ட் நகர்ப்பகுதியில் சூர்யா என்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரபாகரன் சென்றிருக்கிறார். அவரின் நண்பர்கள் கார்த்திக், வினோத் கண்ணன், குணசேகரன் ஆகியோர் ஒன்று கூடி மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர்கொண்ட கும்பல் பிரபாகரனைச் சரமாரியாக வெட்டியிருக்கிறது. இதைத் தடுக்க முயன்ற கார்த்திக் மற்றும் வினோத் கண்ணன் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த அந்தக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயுதங்கள்
ஆயுதங்கள்

அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு பிரபாகரனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்தனர். வெட்டுப்பட்ட கார்த்திக், கண்ணன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குற்றவாளிகளான ராஜ்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``பிறந்தநாள் விழாவையொட்டி பிரபாகரன் தரப்பு மது அருந்தியபோது, அப்பகுதியில் ஜம்புலியம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் தரப்பும் மது அருந்தியுள்ளனர். பிறந்தநாள் விழா கொண்டாடியவர்கள் அதிக கூச்சலிட்டுள்ளனர். இதை மற்றொரு தரப்பு கண்டிக்கவே இரு தரப்புக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஆகியுள்ளது. ராஜ்குமார் தரப்பினர், `இங்கேயே இருங்கடா... ஆளைக் கூட்டிட்டு வர்றோம்’ எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

இதையடுத்து பிரபாகரன் தரப்பினர் அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்கடையின் மாடியிலுள்ள அறையில் படுக்கச் சென்றுவிட்டனர். அப்போது பிரபாகரன், ராஜ்குமாருக்கு போன் செய்து, `என்னடா ஆளைக் கூட்டிட்டு வர்றேனு சொன்னே... வாடா நாங்க இங்கதான் இருக்கோம்’ எனக் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அவரின் நண்பர்கள் ஸ்ரீதர், ரஞ்தித், மதன்குமார், ராஜேஸ்வரன் ஆகியோருடன் சேர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு பிரபாகரனைத் தேடி வந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி பிரபாகரனை வெட்டியுள்ளனர். கார்த்திக், வினோத்குமார் ஆகியோர் அவர்களைத் தடுக்க முயன்றபோது அவர்களையும் வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். அவர்கள் தப்பிக்க முயலவில்லை என்பதால் எளிதில் அவர்களைப் பிடித்துவிட்டோம்’’ என்றனர்.

பாராட்டு
பாராட்டு

குற்றவாளிகளை விரைந்து பிடித்ததற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார், தாலுகா போலீஸாரைப் பாராட்டி சான்றிதழ் அளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism