Published:Updated:

Friends of Police: `இவர்களின் அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல!'

Friends of Police
Friends of Police

சீருடை அணியாத 'காவலர்களின் நண்பன்' (Friends of Police) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்தக் கூட்டத்தினர். `இப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்த சட்டத்தில் இடம் இருக்கிறதா, இந்த அமைப்பு சட்டபூர்வமானதா?' என்றால் இல்லை

இப்படையினர் அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவ முடியும்.

சாத்தான்குளம் கொடூர சம்பவத்திலும் 'காவலர்களின் நண்பன்' என்னும் சட்டவிரோதப் படையினரின் பங்கு நிறைய இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அங்கு இவர்கள் உட்பட காவலர்கள் மிருகவெறித் தாக்குதல் நடத்தியதைக் கண்டுபிடிக்க முடியாதபடி கண்காணிப்பு கேமரா பதிவுகள் 24 மணி நேரத்தில் அழிந்துபோகும் வகையிலான தொழில்நுட்பங்களைக் கையாண்டுள்ளனர். மேலும், கேமராக்கள் இல்லாத பகுதியை அவர்களது சித்ரவதைக் கூடமாக மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக எடுத்து நடத்திவரும் வழக்கில் காவலர்களின் சித்ரவதைகளைப் பட்டியலிட்டுக் கண்டித்ததுடன், இன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் கூண்டோடு ஊர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைக்குச் சென்ற நீதித்துறை நடுவரையே ''உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா' என்று கொச்சையாக எடுத்தெறிந்து பேசும் காவலர்களை நீதித்துறை இதுவரை கண்டதில்லை.

`அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது' என்று நடத்தை விதிகள் உள்ளன. ஆனால், 'காவலர்களின் நண்பன்' படையினருக்கு அப்படியெல்லாம் தடைகள் எதுவும் இல்லை. எனவே, எளிதாக இப்படையினர் அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவ முடியும். இதனால், காவல்துறையின் கடமைகள் அரசியல் ஆக்கப்படுவதுடன், அது ஜனநாயகத்துக்கே ஆபத்தை விளைவிக்கும்.

தற்போது அனைவரும் பரவலாக காவல்துறை சீர்திருத்தங்கள் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர். சீர்திருத்தங்களில் முதல் கோரிக்கை 'காவலர்களின் நண்பன்' என்கிற சட்டவிரோதப் படையைக் கலைக்க வேண்டும் என்பதாகவே இருக்கட்டும். அப்போதுதான் இது போன்ற கொடூரங்களை ஓரளவாவது குறைக்க இயலும்!

- சாத்தான்குளத்தில் இரு வணிகர்களை காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து கொலை செய்த காவலர்கள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவரும் இந்த நேரத்தில், காவலர்களின் சட்டவிரோதச் செயல்களுக்கு துணை நின்ற ஒரு கூட்டத்தைப் பற்றியும் அச்சத்துடன் பேசுகிறார்கள் மக்கள்.

சீருடை அணியாத 'காவலர்களின் நண்பன்' (Friends of Police) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்தக் கூட்டத்தினர். `இப்படி ஓர் அமைப்பை ஏற்படுத்த சட்டத்தில் இடம் இருக்கிறதா, இந்த அமைப்பு சட்டபூர்வமானதா?' என்றால் இல்லை. நாடு முழுவதும் இந்த அமைப்பினரைப் பயன்படுத்தி காவல்துறையினர் செய்துகொண்டிருக்கும் அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

- இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு எழுதிய சிறப்புக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > 'காவலர்களின் நண்பன்' https://bit.ly/3dZYrfm

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

‘காவலர்களின் நண்பன்’

கவுன்சிலிங்... வாடிக்கை!

பொதுமக்களை ஒட்டு மொத்தமாகக் கொந்தளிக்க வைத்துக்கொண்டிருக்கும் சாத்தான்குளம் சம்பவம், தமிழக காவல்துறையின் மீதிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் காணாமல் அடித்துக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து, 'குற்றவாளிகளுடன் தொடர்ந்து தொடர்பிலிருக்க வேண்டியிருப்பதாலும், குற்றச் சம்பவங்களைப் பார்த்துப் பார்த்தே மனது கல்லாகிப் போயிருப்பதாலும், உயரதிகாரிகளுக்குச் சேவகம் புரிந்தே நொந்துபோவதாலும் பெரும்பாலான காவலர்கள் மனரீதியாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் வெளிப்பாடுதான் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள். எனவே, காவலர்களுக்கு கவுன்சலிங் தேவை' என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

Friends of Police: `இவர்களின் அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல!'

போலீஸாரின் இதுபோன்ற கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதல்கள் அரங்கேறும் போதெல்லாம் இத்தகைய குரல்கள் எழுவதும், அதைத் தொடர்ந்து, 'கவுன்சலிங் கொடுக்கப்பட்டது' என்று மீடியாக்களில் செய்திகள் வருவதும் வாடிக்கையே. அதேசமயம், இது போன்ற சம்பவங்கள் தொடர்வதும் வாடிக்கையாக இருப்பதுதான் வேதனை.

இது போன்ற கொடூரச் சம்பவங்களில் ஈடுபடும் காவலர்களின் மன நிலையை மாற்றுவதற்கு என்னதான் வழி என்று மனநல மருத்துவர்களிடம் பேசினோம். அவர்கள் முன்வைத்த கருத்துகளையும் யோசனைகளையும் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க.. > 'சேடிஸ்ட்' போலீஸ்... தேவை கட்டாய கவுன்சலிங்! https://bit.ly/3iy5hMW

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

‘சேடிஸ்ட்’ போலீஸ்...

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு