Published:Updated:

இரண்டு நாளாகத் திறக்கப்படாத கதவு; வீட்டுக்குள் கிடந்த 4 சடலங்கள்! - ஊட்டியை உறையவைத்த சோகம்

சந்திரன் குடும்பத்தினர்
சந்திரன் குடும்பத்தினர்

மார்லிமந்து அணை அருகிலுள்ள குடியிருப்பு ஒன்றில் தந்தை, தாய், மகன், மகள் என ஒரே குடுமபத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாகக் கிடந்த நிகழ்வு ஊட்டியை உறையவைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள மார்லிமந்து பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். 45 வயதான இவர் மனைவி கீதா, மகள் ரக்‌ஷிதா (16), மகன் விஸ்வந்தர் (12) ஆகியோருடன் மார்லிமந்து அணை அருகிலுள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்திருக்கிறார். இதே பகுதியில் விவசாய நிலங்களைக் குத்தகைக்கு வாங்கி, மலைக் காய்கறி விவசாயம் மேற்கொண்டுவந்திருக்கிறார். இந்தநிலையில்,கடந்த இரண்டு நாள்களாக இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாமலேயே இருந்திருக்கிறது.

தற்கொலை
தற்கொலை

இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவைத் தட்டியுள்ளனர். நீண்டநேரமாகத் தட்டியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். சந்திரன், அவரின் மனைவி, மகள், மகன் ஆகிய நான்கு பேரும் வீட்டுக்குள் சடலமாகக் கிடைப்பதைக் கண்டு உறைந்துபோன ஊர் மக்கள், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், நான்கு பேரின் உடலையும் மீட்டு கூறாய்வுக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி: `₹38 லட்சத்தை அவர் இழந்தது சூதாட்டம் இல்லையா?’ - தற்கொலை செய்துகொண்ட விஜயகுமார் மனைவி
சடலமாக மீட்கப்பட்ட ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்
சடலமாக மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்

இது குறித்து தெரிவித்த புதுமந்து காவல்துறையினர், ``குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, பெற்றோர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். குடும்பத்தோடு தற்கொலை முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகிறோம்"என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு