Published:Updated:

நாமக்கல்: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்; கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்

சிறுமி பாலியல் வன்கொடுமை ( representational image )

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து, தொடர்ந்து மிரட்டிய கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்; கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து, தொடர்ந்து மிரட்டிய கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
சிறுமி பாலியல் வன்கொடுமை ( representational image )

நாமக்கல்லைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கும், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஓர் ஆண் நண்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தப் பெண் ஆண் நண்பருடன் நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஏரிப் பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த நான்கு பேர்கொண்ட கும்பல், அந்தப் பெண்ணையும், அவரின் நண்பரையும் மிரட்டி, அந்தப் பெண் அணிந்திருந்த ஒரு பவுன் செயின் மற்றும் இரண்டாயிரம் பணத்தைப் பறித்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு, அவர்களை விடாத அந்தக் கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கியதோடு, மோட்டார் சைக்கிளில் அமரவைத்து, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பயனற்று இருந்த கட்டடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.

பின்னர், அந்தக் கட்டடத்தில் வைத்து அந்தப் பெண்ணைக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தடுக்க வந்த அந்தப் பெண்ணின் ஆண் நண்பரைத் தாக்கியதாகச் சொல்கிறார்கள். மேலும், அதை அந்தப் பெண்ணின் ஆண் நண்பருடைய செல்போனைப் பறித்து அந்தக் கும்பல் வீடியோ பதிவுசெய்ததாகவும் தெரிகிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பரை மிரட்டி கூகுள் பே மூலம் எட்டாயிரம் ரூபாய் பணத்தை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அதன் பிறகு, இருவரையும் அந்த கும்பல், `இங்கே நடந்ததை வெளியே சொன்னால் இருவரையும் கொன்றுவிடுவோம்’ என மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் நாமக்கல் அழகு நகரைச் சேர்ந்த நவீன்குமார், வீசாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ்குமார், அவர்களுக்கு உதவிய பெயின்டர் முரளி, வல்லரசு ஆகியோர் அடங்கிய கும்பல்தான், பெண்ணைத் தாக்கிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, நகை, பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, இது பற்றி வழக்கு பதிவுசெய்த போலீஸார் நவீன்குமார், தினேஷ்குமார், முரளி ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து நகை மற்றும் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள வல்லரசை போலீஸார் தேடிவருகின்றனர். இது குறித்து, நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நாமக்கல்லைச் சேர்ந்த பெண்ணை ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism