Published:Updated:

மனைவி, குழந்தைகள் ரம்பத்தால் அறுத்துக் கொலை; சுவரில் ஒட்டப்பட்டிருந்த கடிதம் - ஐடி ஊழியரும் தற்கொலை

கொலை செய்யப்பட்ட காயத்ரியுடன் கணவர் பிரகாஷ்

சென்னை பல்லாவரம் பகுதியில் மனைவி, குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாக அறுத்துக் கொலை செய்த ஐடி நிறுவன ஊழியர், மனமுடைந்து தானும் தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி, குழந்தைகள் ரம்பத்தால் அறுத்துக் கொலை; சுவரில் ஒட்டப்பட்டிருந்த கடிதம் - ஐடி ஊழியரும் தற்கொலை

சென்னை பல்லாவரம் பகுதியில் மனைவி, குழந்தைகளை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாக அறுத்துக் கொலை செய்த ஐடி நிறுவன ஊழியர், மனமுடைந்து தானும் தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
கொலை செய்யப்பட்ட காயத்ரியுடன் கணவர் பிரகாஷ்

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இவரின் மனைவி காயத்ரி (39). இந்தத் தம்பதியருக்கு, நித்யஸ்ரீ (13) என்ற மகளும், ஹரி கிருஷ்ணன் (8) என்ற மகனும் உள்ளனர். பிரகாஷின் வீட்டுக் கதவு இன்று காலை திறக்கப்படவில்லை. இந்தச் சமயத்தில் பிரகாஷின் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றார். அப்போது கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. அதனால் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது குழந்தைகள், காயத்ரி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பது தெரியவந்தது.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தார். அவர்களும் பிரகாஷ் வீட்டுக்கு வந்து பார்த்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி தலைமையிலான போலீஸார் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்குள் பிரகாஷ், காயத்ரி, குழந்தைகள் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர். பின்னர் நான்கு பேரின் சடலங்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது வீட்டின் சுவரில் கடிதம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்தக் கடிதத்தில், `இந்த முடிவு குடும்பத்தினரோடு சேர்ந்து எடுக்கப்பட்டது’ என்று எழுதப்பட்டிருந்தது. அடுத்து வீட்டில் மரம் அறுக்கும் ரம்பம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு அந்த ரம்பம் எங்கு வாங்கப்பட்டது என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது அதை பிரகாஷ், கடந்த 19-ம் தேதி ஆன்லைன் மூலம் வாங்கியிருந்ததற்கான பில் கிடைத்தது. அதனால் பிரகாஷ் குடும்பத்தினர் திட்டமிட்டே இந்த முடிவை எடுத்திருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கொலை நடந்த வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், பிரகாஷுக்கும் அவரின் மனைவி காயத்ரிக்கும் இடையே கடன் பிரச்னை காரணமாக அடிக்கடி சண்டை நடக்கும் என்று தெரியவந்தது. அதனால் கடன் பிரச்னையால் பிரகாஷ், அவரின் குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்தார்களா என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கொலை
கொலை

இது குறித்து போலீஸார் கூறுகையில்,``உயிரிழந்த பிரகாஷ், மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி காயத்ரி, குழந்தைகளை முதலில் கொலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். அதன் பிறகு அவரும் மரம் அறுக்கும் ரம்பத்தால் தன்னுடைய கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்திருக்கலாம் என கருதுகிறோம். பிரகாஷின் வீட்டில் சில லட்சம் ரூபாய்க்கான கடன் பத்திரங்களைக் கைப்பற்றியுள்ளோம். மேலும் பிரகாஷின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது காயத்ரிக்கும் பிரகாஷுக்கும் நேற்று திருமண நாள்.

அதனால் காயத்ரியின் தந்தை திருப்பதிக்குச் சென்றுவிட்டு இன்று பிரகாஷின் வீட்டுக்கு வந்தார். அதற்கு முன்பு அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டனர். ரம்பம் ஓடிய சத்தம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கேட்டுள்ளது. ஆனால் வீட்டை சுத்தம் செய்யும் கருவி ஓடுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கருதியுள்ளனர். குழந்தைகளும் மனைவியும் சத்தம் போடாமலிருக்க மயக்க மருந்து அல்லது தூக்க மாத்திரைகளை அவர்கள் சாப்பிட்டிருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். பிரேத பரிசோதனையில்தான் நான்கு பேரின் மரணத்துக்கான காரணம் தெரியவரும். வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தின் உண்மைத்தன்மையையும் ஆராய முடிவு செய்துள்ளோம். பிரகாஷ், காயத்ரியின் போன்களுக்கு வந்த அழைப்புகளையும் ஆய்வு செய்துவருகிறோம். கடன் கொடுத்தவர்கள் யாராவது பிரகாஷ், அவரின் குடும்பத்தினரை மிரட்டினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பிரகாஷ், காயத்ரியின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism