Published:Updated:

மும்பை: திருமணம் தாண்டிய உறவால் கணவன் கொலை; வீட்டிலே உடல் புதைப்பு! - மனைவி கைது.. காதலன் தலைமறைவு

கொலை
கொலை

ரியாஸ் வசித்த குடியிருப்பு பகுதியில் விசரித்த போது ரியாஸ் மனைவிக்கும் அமித்திற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

திருமணம் தாண்டிய உறவுகள் சில நேரங்களில் கணவன் அல்லது மனைவியை கொலை செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. கொலை செய்தால் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தே இது போன்ற கொலைகளை செய்கின்றனர். மும்பையில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மும்பை தகிசரில் வசித்தவர் ரியாஸ் ஷேக். இவர் அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் சேல்ஸ்மெனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரஷீதா ஷேக். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறனர்.

ரஷீதா அப்பகுதியை சேர்ந்த அமித் விஷ்வகர்மா என்பவரை காதலித்து வந்தார். ரியாஷ் ஷேக் வேலைக்கு சென்ற நேரத்தில் அமித், ரஷீதா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இது ரியாஸ் ஷேக்கிற்கு தெரிய வந்ததால் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதையடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தனது கணவனை கொலை செய்துவிட ரஷீதா திட்டமிட்டார். இதற்கு அவரது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டார். இதையடுத்து ரியாஸ் ஷேக் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த போது அமித், நைலான் கயிற்றால் ரியாஷ் கழுத்தை நெரித்துள்ளார். இதற்கு ரஷீதா உதவி செய்தார். ரியாஸ் இறந்த பிறகு சாக்குமூட்டயில் கட்டி பின்னர் வீட்டின் சமையல் அறையில் புதைத்துவிட்டனர். இந்த சம்பவம் நடந்த போது வீட்டில் குழந்தைகள் இரண்டு பேரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

மும்பை போலீஸ்
மும்பை போலீஸ்

இக்கொலையை செய்துவிட்டு அவரவர் வேலையை செய்ய ஆரம்பித்தனர். சில நாட்களாக ரியாஸை காணாத பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது நண்பர் இது குறித்து ரஷீதாவிடம் கேட்டதற்கு சரியாக பதிலளிக்கவில்லை. ரஷீதா தனது கணவரை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். ரியாஸ் வசித்த குடியிருப்பு பகுதியில் விசரித்த போது ரியாஸ் மனைவிக்கும் அமித்திற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

போலீஸார் ரியாஸ் வீட்டில் சோதனை செய்து பார்த்த போது சமையல் அறையில் சில டைல்ஸ்கள் புதிதாக பதிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்து அது குறித்து ரஷீதாவிடம் கேட்டதற்கு மழுப்பலான பதிலளித்தார். இதையடுத்து அந்த பகுதியை தோண்டி பார்த்த போது உள்ளே ரியாஷ் உடல் புதைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனே ரஷீதாவை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே அமித் தலைமறைவாகிவிட்டார். கொலை செய்யப்பட்ட ரியாஸ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மற்றொரு கொடூரம்:

இதே போன்று மும்பை பாந்த்ராவில் கொடுத்த பணம் ரூ.1.5 லட்சத்தை திரும்ப கேட்டதோடு தன்னை திருமணம் செய்யவில்லையெனில் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் செய்வேன் என்று மிரட்டிய காதலியை கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டார். பிபின் என்பவர் குஷிதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். அப்பெண்ணிடம் பிபின் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதனை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்ததோடு திருமணம் செய்வதையும் தாமதம் செய்து வந்தார். இதனால் இரவில் இரண்டு பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

 கொலை
கொலை

பணத்தை திரும்ப கொடுக்கவேண்டும் என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லையெனில் பாலியல் வன்கொடுமை புகார் செய்யப்போவதாக குஷிதா மிரட்டினார். இதனால் ஆத்திரத்தில் அவரை பிபின் அடித்து கொலை செய்து பாந்த்ராவில் மிகவும் புகழ்பெற்ற மலைமாதா சர்ச் அருகில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்து பிபினை கைது செய்துவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு