Published:Updated:

தற்கொலைக்கு முயன்ற மனைவி; தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர் - இறுதியில் சோகம்

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

மனைவி தூக்குப் போடும்போது அதைத் தடுத்து, பிறரிடம் கூறி கவுன்சலிங் தராமல், அதை வீடியோ எடுத்த கணவரின் செயலால் பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

தற்கொலைக்கு முயன்ற மனைவி; தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர் - இறுதியில் சோகம்

மனைவி தூக்குப் போடும்போது அதைத் தடுத்து, பிறரிடம் கூறி கவுன்சலிங் தராமல், அதை வீடியோ எடுத்த கணவரின் செயலால் பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகேயுள்ள குல்மோகர் விகார் பகுதியில் வசிப்பவர் சஞ்சீவ் குப்தா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சஞ்சீவ் குப்தாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சோபிதா குப்தா என்பவருடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இந்தத் தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை தம்பதி இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனைவி சோபிதா வீட்டிலேயே தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

கணவன் மனைவி தகராறு
கணவன் மனைவி தகராறு

இந்தச் சம்பவம் தொடர்பாக சஞ்சீவ், சோபிதாவின் தந்தை ராஜ்குமார் குப்தாவிடம் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு வந்த ராஜ்குமார் குப்தா மகளின் நிலையைப் பார்த்து, பதறி அழுதிருக்கிறார். இதற்கிடையில், பெண் வீட்டார் சஞ்சீவ் குப்தாவிடம் என்ன நடந்தது என விசாரித்திருக்கிறார்கள். அப்போது அவர்,"நேற்று எப்போதும்போல சண்டை நடந்தது. ஒருகட்டத்தில் அவள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தூக்கில் தொங்க முயன்றாள். அப்போது நான், `இப்படி நீ செய்தால் அதை வீடியோ எடுத்து உன் வீட்டாருக்கு அனுப்பிவிடுவேன்' எனக் கூறிய பிறகு, அவள் அவ்வாறு செய்யவில்லை. அதன் பிறகு நான் இல்லாத நேரத்தில் இப்படிச் செய்துவிட்டாள்" எனத் தெரிவித்து அந்த வீடியோவையும் காண்பித்திருக்கிறார்.

காவல்துறை
காவல்துறை

மனைவி தூக்குப் போடும்போது அதைத் தடுத்து, பிறரிடம் கூறி கவுன்சலிங் தராமல், அதை வீடியோ எடுத்த கணவரின் செயலால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, சஞ்சீவைக் கைதுசெய்து அவரின் செல்போனைக் கைப்பற்றிய போலீஸார், உயிரிழந்த சோபிதாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.