Published:Updated:

திருமணத்துக்குப் பிறகு நட்பு... மாயமான ஜோடி! - காவல்நிலையப் படியேறிய இரு குடும்பத்தினர்

ஏலகிரி காவல் நிலையம்
ஏலகிரி காவல் நிலையம்

ரகசியக் காதலனால் கடத்திச் செல்லப்பட்ட தன் மனைவி மற்றும் குழந்தையை மீட்டுத் தரக்கோரி தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் கதறிய சம்பவம், ஏலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை பள்ளகனியூரைச் சேர்ந்தவர் 34 வயதுடைய ரவி. கூலித்தொழில் செய்கிறார். இவரின் மனைவி சோபியாவுக்கு 24 வயதாகிறது. இந்தத் தம்பதியருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். இந்தநிலையில், சோபியாவுக்கும் அத்தனாவூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளாகத் திருமணம் தாண்டிய நட்பு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

ஏலகிரி மலை
ஏலகிரி மலை

நாளடைவில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வரவே ஆத்திரமடைந்த ரவி, மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டிருக்கிறார். இந்தநிலையில், சோபியா தனது மகனுடன் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து மாயமானதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, ஏலகிரி மலை காவல் நிலையத்தில் ரவி புகாரளித்திருக்கிறார். தன் மனைவி மற்றும் குழந்தையை ரவீந்திரன் கடத்திச் சென்றுவிட்டதாக புகாரில் தெரிவித்திருக்கிறார். இது போன்று ரவீந்திரன்மீது அவரது மனைவி சங்கீதாவும் மேலும் ஒரு புகாரளித்திருக்கிறார்.

ஏலகிரி காவல் நிலையம்
ஏலகிரி காவல் நிலையம்

`என் கணவர் பீரோவில் வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் ஏழு பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு காதலி சோபியாவுடன் சென்றுவிட்டார். என் கணவரைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக, ஏலகிரி மலை போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு