Published:Updated:

இரவு உணவு சமைப்பதில் தாமதம்... தவா கொண்டு மனைவியை அடித்துக் கொன்ற கணவர்!

கைது

உத்தரப்பிரதேசத்தில் உணவு சமைக்க தாமதமான காரணத்துக்காக மனைவி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இரவு உணவு சமைப்பதில் தாமதம்... தவா கொண்டு மனைவியை அடித்துக் கொன்ற கணவர்!

உத்தரப்பிரதேசத்தில் உணவு சமைக்க தாமதமான காரணத்துக்காக மனைவி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Published:Updated:
கைது

வரதட்சணை கொடுமை, மாமியார் சித்ரவதை, கணவன் துன்புறுத்தல் உட்பட பல காரணங்களால் பெண்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை ஊடகங்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் உணவு சமைக்க தாமதமான காரணத்துக்காக மனைவி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கணவன் மனைவி தகராறு
கணவன் மனைவி தகராறு

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவருபவர் தான் அனுஜ் குமார். பீகாரைச் சேர்ந்தவராகக் கூறப்படும் அனுஜ் குமாரும், அவரின் மனைவியும் தங்களுடைய 5-வயது மகனுடன் நொய்டாவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அனுஜ் குமார், நேற்று முந்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு வீடு திருப்பியிருக்கிறார். அப்போது இரவு உணவு சமைக்க தாமதமாக, அனுஜ் குமாருக்கும் அவருடைய மனைவிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

கைது
கைது

இதில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அனுஜ் குமார், கோபத்தில் உணவு சமைக்கும் தவா கொண்டே மனைவியைத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயத்துக்குள்ளான அனுஜ் குமாரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவர, அவர்களும் இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்திருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் அனுஜ் குமார் மீது வழக்கு பதிவு செய்து தேடுதலில் ஈடுபட்ட போலீஸார், மெட்ரோ நிலையம் அருகே அனுஜ் குமாரை நேற்று கைதுசெய்தனர். மேலும், இந்த வழக்கில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, போலீஸ் அதிகாரி விஜய் குமார் தெரிவித்தார்.