Published:Updated:

உ.பி: பிரதமர் மோடி, முதல்வர் யோகிக்கு ஆதரவு; மனைவிக்கு முத்தலாக் மூலம் விவாகரத்து? - தீவிர விசாரணை

முத்தலாக் ( File Photo )

உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்ததால் அவருடைய கணவர் அவரை விவாகரத்து செய்திருக்கிறார்.

உ.பி: பிரதமர் மோடி, முதல்வர் யோகிக்கு ஆதரவு; மனைவிக்கு முத்தலாக் மூலம் விவாகரத்து? - தீவிர விசாரணை

உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்ததால் அவருடைய கணவர் அவரை விவாகரத்து செய்திருக்கிறார்.

Published:Updated:
முத்தலாக் ( File Photo )

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் மாவட்டத்திலுள்ள பீர்ஷதா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மொஹமத் நசீம். இவருக்குக் கடந்த 2019-ம் ஆண்டு ஷனா இராம் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த நாளிலிருந்து ஷனா எப்போதும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்துப் பேசுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். இதனால் அவருக்குத் தன் மனைவி மீது அதிருப்தி இருந்தது. அதோடு கடந்த தேர்தல்களில் ஷனா பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வீட்டில் அவருக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக சித்ரவதை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது!

முத்தலாக் தடைச் சட்டம்
முத்தலாக் தடைச் சட்டம்

அவரின் கணவரும், அந்தப் பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார். இதனால் அந்த பெண் கடந்த மார்ச் 3-ம் தேதி தன்னுடைய கணவர், அவரின் வீட்டில் இருப்பவர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இந்தப் புகார் குறித்து விசாரித்துவந்தனர். இந்நிலையில் திடீரென மொகமத் தனது மனைவிக்கு முத்தலாக் மூலம் விவாகரத்து கொடுத்து வீட்டைவிட்டு வெளியில் செல்லும்படி விரட்டிவிட்டிருக்கிறார். இதனால் போலீஸார் ஷனாவின் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எதிராக இது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளனர்.

அதோடு இது குறித்து மேற்கொண்டு தீவிரமாக விசாரிக்கும்படி உள்ளூர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் அதிகாரி அகிலேஷ் தெரிவித்தார். மேலும் விரைவில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் முத்தலாக் மூலம் விவாகரத்து கொடுக்க தடைவிதித்து நாடாளுமன்றத்திலும் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் அதிகமான இடங்களில் சட்டவிரோதமாக இது போன்று முத்தலாக் மூலம் விவாகரத்து கொடுக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!