Published:Updated:

தூத்துக்குடி: கண்ணை மறைத்த திருமணம் மீறிய உறவு - மகள், ஆண் நண்பருடன் இணைந்து கணவனைக் கொன்ற மனைவி

பசுவந்தனை காவல் நிலையம்

தூத்துக்குடியில் திருமணம் மீறிய உறவால், மகளுடன் சேர்ந்து மனைவியே கணவனை அடித்துக் கொலைசெய்து, உடலைத் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: கண்ணை மறைத்த திருமணம் மீறிய உறவு - மகள், ஆண் நண்பருடன் இணைந்து கணவனைக் கொன்ற மனைவி

தூத்துக்குடியில் திருமணம் மீறிய உறவால், மகளுடன் சேர்ந்து மனைவியே கணவனை அடித்துக் கொலைசெய்து, உடலைத் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
பசுவந்தனை காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகிலுள்ள அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் எரிந்துகொண்டிருந்த நிலையில் ஓர் ஆண் உடல் கிடந்தது. இது குறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீஸாருக்கு அந்தப் பகுதியினர் தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார்,  தீயில் எரிந்துகொண்டிருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தீயிட்டு  எரிக்கப்பட்டவர் கோவில்பட்டி அருகேயுள்ள குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர்  என்பது தெரியவந்தது.

கொலைசெய்யப்பட்ட ஞானசேகர்
கொலைசெய்யப்பட்ட ஞானசேகர்

மீன் வியாபாரம் செய்துவந்த அவரின் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, குருவிநத்தத்திலுள்ள ஞானசேகரின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், ஞானசேகரின் மனைவி சலைத்ராணி, அவர்களின் 15, 14 வயது மகள்களிடம் விசாரித்தனர். விசாரணையில் மூவரும் மூன்றுவித காரணங்களைச் சொல்லியிருக்கின்றனர். அவர்களது பதிலும்  முன்னுக்குப் பின் முரணாகவே  இருந்திருக்கிறது.

அவரின் மனைவி சலைத்ராணியிடம் போலீஸார் நீண்ட நேரம் விசாரணை செய்ததில், அதே ஊரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியான கருப்பசாமி என்ற கார்த்திக், தன் மூத்த மகளுடன் இணைந்து கணவரை அடித்துக் கொலைசெய்ததுடன், உடலை தீயிட்டுக் கொளுத்தியதையும் ஒத்துக்கொண்டார். கார்த்திக், சலைத்ராணியின் மூத்த மகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து போலீஸார் கார்த்திக், சலைத்ராணி, சலைத்ராணியின் 15 வயது மகள் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். ஞானசேகரின் உடலை எடுத்துச் செல்லப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.  

கைதுசெய்யப்பட்ட சலைத்ராணி
கைதுசெய்யப்பட்ட சலைத்ராணி

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “ஞானசேகரின் மனைவி சலைத்ராணிக்கும் கருப்பசாமி என்ற கார்த்திக்குக்கும் இடையே நீண்டகாலமாக உறவு இருந்துவந்திருக்கிறது. மீன் வியாபாரியான ஞானசேகரன், தினமும் இரவில் தூத்துக்குடிக்குச் சென்று மினி லாரியில் மீன் வாங்கி வந்து, மறுநாள் காலையில் டூ வீலரில் பசுவந்தனைச் சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று மீன் வியாபாரம் செய்துவருவது வழக்கமாம். இரவில் மீன் வாங்கச் செல்லும்போதும், பகலில் வியாபாரத்துக்காக வெளியில் செல்லும் நேரத்திலும் கார்த்திக், சலைத்ராணியின் வீட்டுக்கு வந்து இருவரும் தனிமையில் இருப்பது வழக்கமாம்.  இந்த நிலையில், சலைத்ராணியின் 15 வயது மூத்த மகளை காதலிப்பதாகச் சொல்லி ஆறு மாதங்களாகப் பேசிப் பழகி வந்திருக்கிறார்.

இது சலைத்ராணிக்கு தெரிய வர, முதலில் கோபப்பட்டிருக்கிறார். பிறகு தன் மகளைக் கல்யாணம் செய்தால், கடைசி வரையிலும் தானும் தொடர்பில் இருக்கலாம் என நினைத்து இருவரின் காதலுக்கு ஓ.கே சொல்லியிருக்கிறார். ஆனால், சலைத்ராணியுடனான தொடர்பும், மகளுடனான காதலும் ஞானசேகரனுக்குச் சில நாள்களுக்கு முன்பு தெரியவந்திருக்கிறது. கார்த்திக்கையும் சலைத்ராணியையும் ஞானசேகரன் கண்டித்திருக்கிறார். சில நாள்கள் கழித்து வீட்டில் சலைத்ராணியுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த ஞானசேகரன், இருவரையும் தாக்கியிருக்கிறார். ஆனால், சலைத்ராணி தன் மகளிடம், “நீ காதலிக்கிறது உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சுபோச்சு. உங்க அப்பா இருக்குற வரைக்கும் உங்களை ஒண்ணு சேர விட மாட்டார்”எனச் சொல்லி ஞானசேகரைக் கொலை செய்யச் சம்மதிக்க மூளைச்சலவை செய்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட கார்த்திக்
கைதுசெய்யப்பட்ட கார்த்திக்

மூவரும் ஞானசேகரனைக் கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர். மூன்று நாள்களுக்கு முன்பு இரவில் பசுவந்தனை காட்டுப்பாதை வழியே தனது பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஞானசேகரன் மீது காரை ஏற்றி, கார்த்திக் கொலை செய்ய முயன்றிருக்கிறார். அதில், ஞானசேகரனுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதையடுத்துதான் நேற்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த ஞானசேகரனின் வாயைப் பொத்தி, கம்பியால் அடித்துக் கொலை செய்து அவரின் உடலை சாக்கில் மூட்டையாகக் கட்டி அச்சங்குளம் காட்டுப்பகுதியில் போட்டு பெட்ரோல் ஊற்றி, தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்” என்றனர்.