Published:Updated:

சென்னை: திருமணமான 40-வது நாளில் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்?! - அதிர்ச்சியில் கணவன் குடும்பத்தினர்

இளம்பெண் அபிநயா, நடராஜன்

திருமணம் நடந்து 40-வது நாளில் இளம்பெண், தங்க நகைகள், பணத்துடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை: திருமணமான 40-வது நாளில் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்?! - அதிர்ச்சியில் கணவன் குடும்பத்தினர்

திருமணம் நடந்து 40-வது நாளில் இளம்பெண், தங்க நகைகள், பணத்துடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
இளம்பெண் அபிநயா, நடராஜன்

சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரின் மூத்த மகன் நடராஜன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பேக்கரி ஒன்றில் நடராஜன் வேலை பார்த்தபோது அதே பேக்கரியில் மதுரையைச் சேர்ந்த அபிநயா என்ற பெண் வேலை பார்த்தார். அதனால் நடராஜனும் அபிநயாவும் காதலித்தனர். பின்னர் இந்தத் தகவலை நடராஜன், தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய நடராஜனின் பெற்றோர் அபிநயாவைச் சந்தித்துப் பேசினர்.

அபிநயா, நடராஜன்
அபிநயா, நடராஜன்

பின்னர், அபிநயாவிடம், `உன்னுடைய அப்பா, அம்மாவின் போன் நம்பரைக் கொடு, திருமணம் குறித்து முடிவு செய்யலாம்' என நடராஜனின் பெற்றோர் கூறியுள்ளனர். அதற்கு அபிநயா, `எனக்கு ஏற்கெனவே வயதானவருடன் திருமணம் நடந்துவிட்டது. அந்தத் திருமண வாழ்க்கை பிடிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்துவிட்டேன். மேலும் நான் சென்னையில் இருப்பது என் குடும்பத்தினருக்குத் தெரியாது. எனவே, என்னுடைய குடும்பத்தினர் இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்க மாட்டார்கள். உங்களுக்கு விருப்பமென்றால் நடராஜனுடன் எனக்குத் திருமணம் செய்துவையுங்கள்' என்று கூறியிருக்கிறார் அபிநயா.

இதையடுத்து அபிநயா மீது இரக்கப்பட்ட நடராஜனின் பெற்றோர், தங்களின் சொந்தச் செலவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கோயில் ஒன்றில் நடராஜனுக்கும் அபிநயாவுக்கும் திருமணம் செய்துவைத்தனர். அதன் பிறகு நடராஜனும் அபிநயாவும் கணவன் மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில் கடந்த 19.10.2022-ம் தேதி அபிநயா வீட்டிலிருந்து மாயமானார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணம், பட்டுப்புடவைகள் மாயமாகியிருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்த நடராஜனின் குடும்பத்தினர் அபிநயாவைப் பல இடங்களில் தேடினர். அதோடு அவரை செல்போனில் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் என பதில் வந்திருக்கிறது.

அபிநயா, நடராஜன்
அபிநயா, நடராஜன்

இதையடுத்து நடராஜன், தாம்பரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் மாயமான அபிநயாவைத் போலீஸார் தேடிவருகின்றனர். திருமணம் நடந்து 40-வது நாளில் இளம்பெண், நகை, பணத்துடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``அபிநயாவின் குடும்ப விவரங்கள் நடராஜனுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் தெரியவில்லை. மேலும் சந்தோஷமாக இருந்த அபிநயா திடீரென மாயமாகியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அபிநயா, வேலை செய்த பேக்கரியிலும் விசாரணை நடத்தியிருக்கிறோம். அபிநயா பயன்படுத்திய செல்போன் நம்பரின் கால் ஹிஸ்டரி அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம். விரைவில் அபிநயாவைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே என்ன நடந்தது என்பது தெரியவரும்" என்றனர்.