Published:Updated:

நாமக்கல்: `'யாரோடு பேசுகிறாய்'; 2-வது மனைவி மீது சந்தேகம்!’ - மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவர்

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர் ( நா.ராஜமுருகன் )

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நித்யா, திடீரென நேற்று இரவு உயிரிழந்தார். இதனால், முருகேசன் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றியதோடு, தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

தனது இரண்டாவது மனைவி மீது சந்தேகப்பட்ட நபர், அவர்மீது மண்ணெண்ணெயை ஊற்றி எரிக்க, அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிழந்துள்ள சம்பவம், உறவினர்களை அதிரவைத்திருக்கிறது. இதனால், முதலில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்திருந்த போலீஸார், அந்தப் பெண் இறந்ததால் அவரின் கணவர்மீது, கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர்
நா.ராஜமுருகன்
கரூர்: `என் மகன் இல்லாம எப்படி உயிர்வாழ்வேன்?' - மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் மரணம்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே இருக்கிறது தண்ணீர்பந்தல்மேடு. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். தனியார் பால்வண்டி டிரைவராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு வர, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து தனது பிறந்த ஊருக்கு தனலட்சுமி சென்றுவிட்டார். இதனால், முருகேசன் தனியே வாழ்ந்துவந்தார். இந்தநிலையில், முருகேசனுக்கு பரமத்தி அருகேயுள்ள கீழ்சாத்தம்பூரைச் சேர்ந்த பரந்தாமன் என்பவரின் மனைவி நித்யாவுடன் (வயது 32) பழக்கம் ஏற்பட்டது.

இவர்களது பழக்கம் நாளடைவில் எல்லை மீற, இரண்டு வீடுகளிலும் கண்டித்துள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் உறவினர்களின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்துகொண்டு, தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் ஒரே வீட்டில் குடும்பம் நடத்திவந்தனர். இந்தநிலையில், நித்யா அடிக்கடி செல்போனில் பேசியதாகக் கூறப்படுகிறது. இது, முருகேசனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அடிக்கடி அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. 'யாரோடு பேசுகிறாய்' என்று கேட்டு, நித்யாவை அடித்து வதைத்தாகவும் சொல்கிறார்கள். இதற்கிடையே, இருவருக்கும் சண்டை அதிகமாக, கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி முருகேசனுக்கும் நித்யாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர்
நா.ராஜமுருகன்

அப்போது, முருகேசன் நித்யாவின் செல்போனைப் பறித்து கீழே போட்டு உடைத்திருக்கிறார். அதோடு, ஆத்திரம் தணியாத முருகேசன், தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை நித்யா மீது ஊற்றி, தீவைத்து எரித்தார். இதில், பலத்த காயம் அடைந்த நித்யா, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, நித்யாவின் உறவினர்கள் பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின்பேரில் பரமத்திவேலூர் காவல் நிலைய போலீஸார் முருகேசனைக் கைதுசெய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த நித்யா, திடீரென நேற்று இரவு உயிரிழந்தார். இதனால், பரமத்திவேலூர் காவல் நிலைய போலீஸார் நித்யாவின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதோடு, முருகேசன் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றியதோடு, தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். தனது இரண்டாவது கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு