Published:Updated:

`செல்போனில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாள்’ - சந்தேகத்தால் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்

சரிதாவின் உடல் - கணவன் ராமு

ஆண் நண்பர்களோடு செல்போனில் அதிக நேரம் பேசிய மனைவியை அடித்து கொலை செய்து சடலத்தை உறைக் கிணற்றுக்குள் வீசிய கணவனை போலீஸார் கைது செய்தனர்.

`செல்போனில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாள்’ - சந்தேகத்தால் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்

ஆண் நண்பர்களோடு செல்போனில் அதிக நேரம் பேசிய மனைவியை அடித்து கொலை செய்து சடலத்தை உறைக் கிணற்றுக்குள் வீசிய கணவனை போலீஸார் கைது செய்தனர்.

Published:Updated:
சரிதாவின் உடல் - கணவன் ராமு

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அருகேயுள்ள பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் ராமு, வயது 40. இவர் மனைவி சரிதா.வயது 29. இருவருக்கும் திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆவதாகச் சொல்லப்படுகிறது. ஒரு ஆண் குழந்தைப் பிறந்து இறந்துவிட்டதாகவும், மறுபடியும் குழந்தைப் பேறு இல்லாததால் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து மனைவி சரிதாவைக் காணவில்லை எனக்கூறி ரத்தினகிரி காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு, சொந்த ஊரான கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப்-புக்கு சென்று விட்டாராம் ராமு.

இந்த நிலையில், பூட்டுத்தாக்குப் பகுதியிலிருக்கும் ராமுவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் ரத்தினகிரி போலீஸாருக்கு நேற்று மாலை தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து, வீட்டு வளாகத்திலிருக்கும் உறைக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது, போர்வையால் சுருட்டப்பட்டு கயிற்றால் கட்டப்பட்ட ஒரு மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசுவது தெரியவந்தது.

சரிதா
சரிதா

அவற்றை மேலே தூக்கி பிரித்து பார்த்தபோது, சரிதாவின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் கொலைச் செய்யப்பட்டு, மூட்டையாகக் கட்டி கிணற்றுக்குள் வீசப்பட்டிருப்பதும் உறுதியானது. இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலையில், சரிதாவின் கணவன் ராமுவுக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகிப்பதற்குள், அவராகவே திரும்ப வந்து பூட்டுத்தாக்கு கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து விட்டார். விசாரணையில், மனைவி சரிதா அடிக்கடி செல்போனில் யாரிடமோ கொஞ்சிக் கொஞ்சிப் பேசியதாகவும், பலமுறை கண்டித்தும் அவர் திருந்தததால் கொலை செய்து போர்வையில் சுருட்டி கிணற்றில் வீசிவிட்டதாகவும் ராமு வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதையடுத்து, ராமுவை கைது செய்த ரத்தினகிரி போலீஸார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.