Published:Updated:

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்; நடிகர் ஷாருக் கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் ஆர்யன் கான்
கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் ஆர்யன் கான்

நடிகர் ஷாருக் கான் மகன் உட்பட சிலர் கப்பலில் போதை பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பது ஒரு வாரத்துக்கு முன்பே போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் (23), சனிக்கிழமை இரவு மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் நடந்த பார்ட்டியில் கலந்துகொண்டார். கப்பலில் சாதாரண உடையில் ஏறிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 20 பேர், பார்ட்டியில் கலந்துகொண்ட அனைவரையும் சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போதைப்பொருள் வைத்திருந்த நடிகர் அர்பாஸ் மெர்சன்ட், போதைப்பொருள் உட்கொண்ட எட்டுப் பேர் பிடித்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களைச் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆர்யன் கான் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் ஷிண்டே, கப்பலில் நடந்த பார்ட்டிக்கு ஆர்யனை ஒரு விருந்தினராகத்தான் அழைத்திருந்தனர். அவரிடம் எந்த போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. போதைப்பொருள் உட்கொண்டதாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றம் ஜாமீனில் வெளிவரகூடியதுதான் என்று வாதிட்டார். ஆனால் ஆர்யன் கான் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுடன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்திருப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வழக்கறிஞர் தெரிவித்தார்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆர்யன் கான்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆர்யன் கான்
சுஷாந்த் மரண வழக்கு... போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு! - 3ம் நாள் விசாரணையில் ரியா கைது

இதையடுத்து அனைவருக்கும் ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் அவர்களைத் தங்களது காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இது குறித்து, இந்த ரகசிய ஆபரேஷனுக்கு தலைமை தாங்கிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே கூறுகையில், ``ஒரு வாரத்துக்கு முன்பு எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலில், மும்பையிலிருந்து கோவா செல்லும் கப்பலில் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டுப் பேர் போதைப்பொருளுடன் கலந்துகொள்வதாகவும் தகவல் கிடைத்தது. உடனே நாங்கள் 22 பேர் அந்தக் கப்பலில் சாதாரண உடையில் ஏறினோம். நாங்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததால் எங்களை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. கப்பல் கிளம்பிய சிறிது நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். தொடர்ந்து ரெய்டு நடத்தி 13 கிராம் கொகெய்ன், 21 கிராம் சரஸ், எம்.டி பார்ட்டி மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நடிகர் அர்பாஸ் தனது ஷூவுக்குள் சரஸ் போதைப்பொருள்களை மறைத்து வைத்திருந்தார். அதை எடுத்தபோது அருகில் ஆர்யான் கானும் உடனிருந்தார். ஆர்யன் கானிடம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால் ஆர்யன் கான் அளித்த வாக்குமூலத்தில் நடிகர் அர்பாஸிடம் பிடிபட்ட போதைப்பொருளை இருவரும் பயன்படுத்தத்தான் வைத்திருந்தோம் என்று தெரிவித்திருக்கிறார்" என்றார்.

கப்பலில் நடிகர் மகன் உட்பட முக்கியப் பிரமுகர்களுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதற்குள்தான் பார்ட்டி நடத்தப்பட்டது. இன்று அனைவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவிருக்கின்றனர். அவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று மாலைக்குள் தெரியவரும். ஷாருக் கான் மகன் கைதுசெய்யப்பட்டவுடன், நடிகர் சல்மான் கான் ஞயிற்றுக்கிழமை ஷாருக் கான் வீட்டுக்குச் சென்று வந்தார். மற்றொருபுறம் குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை மறைக்கவே இந்த ரெய்டு நடத்தப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு