Published:Updated:

ஒரே வருடத்தில் 86 வன்கொடுமைகள்... பெண்களுக்கு நரகமாக மாறும் உன்னாவ்!

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து முகம் சிதைந்த ஹீனா
துப்பாக்கிக் குண்டு பாய்ந்து முகம் சிதைந்த ஹீனா

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாவட்டமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டம் உள்ளது. 2019-ல் மட்டும் 185 பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன.

உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில், இந்த ஆண்டு மட்டும் 185 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. உச்சக்கட்டமாக, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகளே எரித்துக் கொன்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது. நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஜனவரியிலிருந்து நவம்பர் மாதம் வரை 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 99 பாலியல் வன்புணர்வுகள் நிகழ்ந்துள்ளன. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை வெளியே சொல்லப் பயந்து, காவல் நிலையம் செல்லாமல் ஏராளமான பெண்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

உன்னாவ் எம்.எல்.ஏ குல்தீப் சிங்
உன்னாவ் எம்.எல்.ஏ குல்தீப் சிங்

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் போலீஸார் காட்டும் அலட்சியமும் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே இருக்கிறது. தற்போது, உன்னாவில் எரித்துக் கொல்லப்பட்ட பெண், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகே வழக்கு பதியப்பட்டுள்ளது. போலீஸார், குற்றவாளிகளைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினாலும், அவர்கள் ஜாமீனில் வெளிவந்து பின்னர் தலைமறைவாகிவிடுவது வாடிக்கையாக உள்ளது.

உன்னாவில் போலீஸ் அதிகாரிகள் அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கின்றனர். எந்த மாதிரியான குற்றவாளியாக இருந்தாலும், அரசியல் தலைவர்களின் உத்தரவு இல்லாமல் போலீஸாரால் கைதுசெய்ய முடியாது. உன்னாவ் போலீஸ் துறையே அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. உன்னாவ் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீதுகூட பாலியல் குற்றச்சாட்டு உள்ளது.

பாலியல் குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம்
பாலியல் குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம்

பாலியல் வழக்கு காரணமாக, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து குல்தீப் நீக்கப்பட்டது தனிக் கதை. உத்தரப்பிரதேச மாநில சபாநாயகர் ஹரிடே நரேஷ் தீக்ஷித், சட்ட அமைச்சர் ப்ரீஜேஷ் பதக், சர்ச்சைக்குரிய எம்.பி சாக்ஷி மகராஜ் போன்றவர்கள், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். பாலியல் வழக்கில் சிக்கிய குல்தீப் சிங் செங்கர் மீது எஃப்.ஐ.ஆர் வழக்குப்பதிவு செய்யவே 9 மாதங்கள் ஆகிவிட்டன. அரசியல்வாதிகளும் போலீஸ்காரர்களும் பின்னிப் பிணைந்திருப்பதைத்தானே இது காட்டுகிறது?

`106 நாள்கள் ஏன் சிறைவைக்கப்பட்டார் சிதம்பரம்?!' - கட்சி அலுவலகத்தில் கொதித்த முதல்வர் நாராயணசாமி

உத்தரப்பிரதேசம் மட்டுமல்ல, வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகவே நடக்கின்றன. மத்தியப்பிரதேசத்தில் நேற்று நடந்த மற்றொரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ரகூத் என்ற கிராமத்தில் நடந்த திருமண விழாவில், ஹினா என்ற பெண் நடனமாடியுள்ளார். திடீரென்று நடனத்தை அவர் நிறுத்தியதால் , ஆத்திரமடைந்த ஒருவர், துப்பாக்கியால் ஹினாவின் முகத்தை நோக்கி சுட்டதில், அந்தப் பெண்ணின் முகம் சிதைந்தது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். குற்றவாளிகளைப் போலீஸார் தேடிவருவதாகக் கூறுகின்றனர். இதுவரை, கைதுசெய்யப்படவில்லை.

உன்னாவ் மாவட்டம்
உன்னாவ் மாவட்டம்

இந்தியாவிலேயே பின்தங்கிய மாவட்டங்கள் பல உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில்தான் உள்ளன. உன்னாவ் மாவட்டமும் அதில் ஒன்று. உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உன்னாவ் மாவட்டத்தின் மக்கள்தொகை 31 லட்சம். படிப்பறிவு குறைவான மாவட்டம். வேலை வாய்ப்பும் மிகக் குறைவு. பெண்களை அடிமையாகக் கருதும் மனப்போக்கு உத்தரப்பிரதேச மாநில ஆண்களிடையே அதிகம். குழந்தைகள் பெற்றுத் தரும் இயந்திரமாக பெண்களைப் பார்க்கும் மனப்பாங்கும் அதிகம். மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்த எந்த புரிதலும் விழிப்புணர்வும் உத்தரப்பிரதேசத்தில் கிடையாது. இந்த மாநிலத்தின் மக்கள்தொகை மட்டும் 25 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மக்களவைத் தொகுதிகள் மட்டும் 85 என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு