Published:Updated:

`நான் போலீஸ்தான்.. ஊரில் இறக்கிவிடுகிறேன் வா!'- நம்பிச் சென்ற பெண்ணுக்குக் காவலரால் நேர்ந்த கொடுமை

பூரி நகரில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் நேற்று இரவு தனது கிராமத்துக்குச் செல்வதற்காகப் பேருந்தின் வருகைக்காகக் காத்திருந்துள்ளார்.

representational image
representational image

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மாநிலங்களவையில் நேற்று பெண் எம்.பி-க்கள் பேசுகையில், `இந்தச் சம்பவம் நாட்டுக்குப் பெரும் தலைகுனிவு. குற்றவாளிகளைப் பொதுஇடத்தில் வைத்து அடித்துக்கொல்ல வேண்டும்' எனக் கோபம் பொங்கப் பேசியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் சூடு மறைவதற்குள் ஒடிசாவின் கோயில் நகரமான பூரியில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூரி நகரில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் நேற்று இரவு தனது கிராமத்துக்குச் செல்வதற்காகப் பேருந்தின் வருகைக்காகக் காத்திருந்துள்ளார்.

representational image
representational image

அங்கு காரில் வந்த ஒருவர், லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி அவரை ஏற்றியுள்ளார். காரில் ஏறிய பிறகே மேலும் மூன்று பேர் அந்தக் காருக்குள் இருப்பது அந்தப் பெண்மணிக்குத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, காரை அப்பெண்ணின் கிராமத்துக்குச் செலுத்தாமல் வேறு பாதையில் செலுத்தியுள்ளனர். இதன்பின்னர், குடியிருப்பு ஒன்றுக்கு அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது குற்றவாளி ஒருவரின் ஐ.டி கார்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்த இளம்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

`2 வருடமா நோ லைசென்ஸ்; போலீஸ் கோட்டைவிட்ட அந்த நிமிடம்!' -பெண் மருத்துவர் கொலையில் அதிர்ச்சி பின்னணி

புகாரில், `நான் புவனேஸ்வரிலிருந்து ககத்பூரில் உள்ள எனது கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். அதற்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். அங்கு வந்த ஒருவர், `நான் போலீஸ்தான்.. இரவுநேரத்தில் நிற்க வேண்டாம். ஊரில் இறக்கிவிடுகிறேன் வா' என்றுகூறி எனக்கு லிஃப்ட் கொடுத்தார். அவரை நம்பி காரில் ஏறினேன். ஆனால், என்னை ககத்பூர் நோக்கி அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் என்னை பூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நான்கு பேரும் என்னை ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

representational image
representational image

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் குற்றவாளியின் ஐ.டி கார்டையும் வாங்கி சோதனையிட்டனர். சோதனையில் அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்த இருவரில் ஒருவர் முக்கிய குற்றவாளியான போலீஸ் கான்ஸ்டபிள் ஜிதேந்திர சேத்தி என்பதும் அவர் சில தினங்களுக்கு முன்புதான் வேறொரு குற்றத்துக்காக பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், இளம்பெண்ணை அந்தக் காவலர் பாலியல் வன்கொடுமை செய்த இடம் பூரி காவலர் குடியிருப்பு என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் 2 தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.