பஞ்சாப் மாநிலம், பதிண்டாவில் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறுமி ஒருவர் தன் அத்தையுடன் வசித்துவருகிறார். சிறுமியின் அத்தை வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஜஸ்பால் கௌர் என்ற பெண், சிறுமியின் அத்தையுடன் நெருக்கமாகப் பழகிவந்திருக்கிறார். அடிக்கடி அவரின் வீட்டுக்கு வநது செல்லும் அந்தப் பெண்ணிடம், சிறுமியின் அத்தை தன்னுடைய ஏழ்மை நிலை குறித்துச் சொல்லி வருந்தியிருக்கிறார். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்தப் பெண், ``உன்னுடைய குடும்பம் இவ்வளவு கஷ்டப்படுகிறதே.... உங்களுக்கு நான் உதவுகிறேன்" என நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறி, ``கரார் நகருக்குச் சிறுமியை அனுப்புங்கள். நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருகிறேன்" எனக் கூறியிருக்கிறார். சிறுமியின் அத்தையும் அதற்குச் சம்மதம் தெரிவித்து, சிறுமியைத் தனியாக கரார் நகருக்கு அனுப்பிவைத்திருக்கிறார். கரார் நகருக்குச் சென்ற சிறுமியை அங்கித் என்ற நபரும், அவர் நண்பரும் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பிளாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு ஜஸ்பாலும் இருந்திருக்கிறார். மறுநாள் காலை அன்கித்தும், அவர் நண்பரும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன் பிறகு அவர்கள் சென்றதும், அந்தச் சிறுமி அங்கிருந்து தப்பித்து மீண்டும் பதிண்டா கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். சிறுமி தன் அத்தையிடம் நடந்தவற்றைக் கூறியதையடுத்து, இருவரும் காவல் நிலையத்துக்குச் சென்று இது குறித்து புகாரளித்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் பக்கத்து வீட்டில் வசித்த பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்கள் என மூவர் மீதும் வழக்கு பதிவுசெய்தனர். அவர்கள் தலைமறைவாகிவிட்டதால் அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.