Published:Updated:

`கிணற்றில் தலை; கல்குவாரியில் உடல்!'- நண்பர்களுடன் சேர்ந்து 2வது கணவரைக் கொலை செய்த பெண்

வேறொருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் 2வது கணவரின் தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளார் இளம்பெண்.

புதியம்புத்தூர்
புதியம்புத்தூர்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் விக்ரமாதித்ய ராஜா என்ற ராஜபாண்டி (51). கார் புரோக்கரான இவருக்கு 2 மனைவிகளும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் மீது நெல்லை, சென்னை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், கார் புரோக்கராக இருப்பதால் வீட்டிற்கு எப்போதாவதுதான் வந்து செல்வாராம்.

கொலை செய்யப்பட்ட ராஜபாண்டி
கொலை செய்யப்பட்ட ராஜபாண்டி

பல நாள்கள், பல மாதங்கள் வரைகூட வீட்டுக்கு வராமல் இருந்தாலும், இரண்டு மனைவிகளும் இவரைத் தேட மாட்டார்களாம். இந்நிலையில் இவருக்கு நெல்லை மாவட்டம் வன்னிக்கோனந்தலைச் சேர்ந்த சித்ரா (20) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சித்ரா, திருமணமாகி ஏற்கெனவே விவாகரத்தானவர். சித்ராவுடனான பழக்கம் நாளடைவில் அதிகரித்துள்ளது.

`பெற்றோரைக் கொலை செய்துட்டேன்...'- பைக்கை மடக்கிப்பிடித்த போலீஸை அதிர வைத்த திருச்சி வாலிபர்!

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள தனது நண்பர்களும் கார் டிரைவர்களுமான ராமர், சக்திவேல் ஆகியோரின் உதவியால் வாடகைக்கு வீடு எடுத்து சித்ராவுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார் ராஜபாண்டி. அப்போது, ``நாங்க ரெண்டு பேரும் அப்பா, மகள். என் மகளுக்கு தாய் இல்லை” எனச் சொல்லி இருவரும் அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்துள்ளனர் இருவரும். இந்நிலையில், கார் வாங்குவது, விற்பது தொடர்பாக ராஜபாண்டியின் வீட்டிற்கு ராமர் அடிக்கடி வந்து செல்வாராம். அப்போது ராமருக்கும் சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

உடல் வீசப்பட்ட பகுதி
உடல் வீசப்பட்ட பகுதி

விக்ரமாதித்ய ராஜபாண்டி வீட்டில் இல்லாத நேரத்தில் ராமர் அடிக்கடி வருவது தொடர்ந்துள்ளது. இவர்களது விவகாரத்தைத் தெரிந்துகொண்ட ராஜபாண்டி, சித்ராவைக் கண்டித்துள்ளார். கடந்த 20 நாள்களுக்கு முன்பு மதுபோதையில் சித்ராவை அடித்துத் துன்புறுத்தியுள்ளார் ராஜபாண்டி. இந்த விவகாரத்தை சித்ரா, ராமரிடம் போனில் கூறியுள்ளார்.

இதையடுத்து சித்ரா, ராமர் மற்றும் அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர் சேர்ந்து ராஜபாண்டியின் தலையைத் துண்டித்தனர். பின்னர், உடலையும் தலையையும் தனித்தனியாக சாக்குப் பைகளில் கட்டியுள்ளனர். தலையை புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும், உடலை கீழத்தட்டப்பாறை பகுதியிலுள்ள கல்குவாரியிலும் வீசியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ராஜபாண்டி
கொலை செய்யப்பட்ட ராஜபாண்டி

புதியம்புத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய ராமர், சித்ராவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடைய சக்திவேல், கனி ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.