Published:Updated:

கொதிக்கும் எண்ணெயில் சிறுமியின் கையை நுழைத்த கொடூரம்; பெண் கைது!

``நீதான் சொல்லியிருக்க வேண்டும்’’ என்று லக்கி கூறியிருக்கிறார். ஆனாலும் சிறுமி, தான் சொல்லவில்லை என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குஜராத் மாநிலம், பதான் மாவட்டத்திலுள்ள சந்தால்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த லக்கி மக்வானா என்ற பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். இதைப் பக்கத்து வீட்டில் வசிக்கும் 11 வயது சிறுமி பார்த்துக்கொண்டிருந்தார். லக்கியின் பெற்றோர் வந்தவுடன் அவர்களுக்கு எப்படியோ லக்கி வேறு ஓர் ஆணுடன் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

Vikatan
சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

உடனே இது குறித்து அவரது பெற்றோர் அந்தப் பெண்ணுடன் சண்டையிட்டனர். இதனால் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுமிதான் தனது பெற்றோரிடம், தான் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததைச் சொல்லியிருக்க வேண்டும் என்று லக்கி கருதினார். சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்ற நேரம் பார்த்து, அவளது வீட்டுக்குள் சென்ற லக்கி, `ஏன் என் பெற்றோரிடம் நான் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததைக் கூறினாய்’ எனக் கேட்டிருக்கிறார். ஆனால், அந்தச் சிறுமி தான் சொல்லவில்லை எனக் கூறியிருக்கிறார். ஆனால், `நீதான் சொல்லியிருக்க வேண்டும்’ என்று லக்கி கூறியிருக்கிறார். ஆனாலும் சிறுமி தான் சொல்லவில்லை என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார். உடனே லக்கி அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று, ``பொய் சொல்லவில்லையெனில் இந்தக் கொதிக்கும் எண்ணெயில் கையை விடு... நம்புகிறேன்!" என்று தெரிவித்தார். சிறுமி கையை எண்ணெயில் வைக்க மறுத்தார்.

ஆனால் அந்தப் பெண் கட்டாயப்படுத்தி சிறுமியின் கையைப் பிடித்து கொதிக்கும் எண்ணெயில் வைத்தார். இதனால் சிறுமி வலி தாங்காமல் அலறினார். சிறுமியைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு லக்கி தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து லக்கியைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் கேட்டுக்கொண்டிருக்கிறதுது. லக்கி, சிறுமியின் கையைப் பிடித்து எண்ணெயில் வைத்ததை யாரோ ஒருவர் தனது மொபைல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு