Published:Updated:

புனே: திருமணம் மீறிய உறவு... உறவை தொடர 15 வயது மகளை ஆண் நண்பருக்கு திருமணம் செய்து வைத்த தாய் கைது!

போக்சோ

புனேயில் தனது 28 வயது காதலனுக்கு 15 வயது மகளை திருமணம் செய்து வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.

புனே: திருமணம் மீறிய உறவு... உறவை தொடர 15 வயது மகளை ஆண் நண்பருக்கு திருமணம் செய்து வைத்த தாய் கைது!

புனேயில் தனது 28 வயது காதலனுக்கு 15 வயது மகளை திருமணம் செய்து வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.

Published:Updated:
போக்சோ

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள அகமத் நகரில் வசிக்கும் சகுந்தலா(33) என்ற பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பையன் ஒருவனுடன் தொடர்பு இருந்தது. இத்தொடர்பு நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியது. 28 வயதாகும் அந்த வாலிபர் அப்பெண்ணின் வீட்டில் தங்கி இருந்தார். அந்த 33 வயது பெண்ணுக்கு 15 வயதில் ஒரு மகள் இருந்தார். அப்பெண் பள்ளியில் படித்து வந்தார்.

இதனிடையே, அந்த வாலிபர் தொடர்ந்து அதே வீட்டில் தங்க என்ன செய்யலாம் என்று சகுந்தலாவுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தினார். உடனே சகுந்தலா தனது மகளை திருமணம் செய்து கொண்டால் இதே வீட்டில் வசிக்கலாம் என்று தெரிவித்தார். அந்த வாலிபரும் இத்திட்டத்திற்கு சம்மதித்தார். இதையடுத்து அகமத் நகரில் உள்ள கோயில் ஒன்றில் வைத்து 15 வயது மகளை சகுந்தலா கட்டாயப்படுத்தி 28 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வந்தார். அதோடு அந்த வாலிபருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

போக்சோ
போக்சோ

இதனால் மைனர் பெண் கட்டாய உறவுக்கு உற்படுத்தப்பட்டார். தனக்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து அப்பெண் தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இது குறித்து சமூக சேவகர் ஒருவரிடமும் பேசினர். உடனே சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அந்த வாலிபர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து வாலிபர் மற்றும் சகுந்தலாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மைனர் பெண்ணிடம் சகுந்தலா இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார். அதனால் தான் மைனர் பெண் வேறு வழியில்லாமல் இத்திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.