Published:Updated:

மகாராஷ்டிரா: `பாலியல் புகார் செய்வேன்’ - அமைச்சரை மிரட்டி, பணம் பறிக்க முயன்ற பெண்?!

தனஞ்சே முண்டே

மகாராஷ்டிராவில் அமைச்சரை மிரட்டி ரூ.5 கோடி பறிக்க முயன்ற பெண் கைதுசெய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா: `பாலியல் புகார் செய்வேன்’ - அமைச்சரை மிரட்டி, பணம் பறிக்க முயன்ற பெண்?!

மகாராஷ்டிராவில் அமைச்சரை மிரட்டி ரூ.5 கோடி பறிக்க முயன்ற பெண் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
தனஞ்சே முண்டே

மகாராஷ்டிராவில் சமூக நீதித்துறை அமைச்சராக இருப்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனஞ்சே முண்டே. கடந்த ஆண்டு, `நான் அமைச்சர் தனஞ்சே முண்டேயின் இரண்டாவது மனைவி’ என்று கருணா சர்மா என்ற பெண் ஒருவர் தெரிவித்த கருத்து பூதாகரமானது. கருணா சர்மாவின் சகோதரி ரேணு சர்மா தனஞ்சே முண்டே மீது பாலியல் புகார் அளிக்க, அந்தக் குற்றச்சாட்டை மறுத்த தனஞ்சே முண்டே கருணா சர்மா உடனான உறவு குறித்து பகிரங்கப்படுத்தினார்.

தற்போது கருணா சர்மாவின் சகோதரி ரேணு சர்மா தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றார் என மலபார் ஹில் போலீஸில் ரேணு மீது புகார் அளித்துள்ளார் அமைச்சர் முண்டே. அதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார் அந்தப் பெண்ணைத் தேடிவந்தனர். விசாரணையில் அவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். இவ்வழக்கை குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர்.

தனஞ்சே முண்டே
தனஞ்சே முண்டே

தனிப்படை போலீஸார் விரைந்து சென்று அந்தப் பெண்ணை கைது செய்து உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மும்பைக்கு அழைத்து வந்தனர். அமைச்சர் முண்டே, தான் கொடுத்துள்ள புகாரில், ரேணு சர்மா தன்னிடம் ரூ.5 கோடி பணமும், 5 கோடி மதிப்புள்ள கடையும், விலை அதிகமான மொபைல் போன் உட்பட விலை மதிப்புமிக்க பொருள்களைக் கேட்டார். அப்படிக் கொடுக்கவில்லையெனில் பாலியல் புகார் செய்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவேன் என்று மிரட்டினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அமைச்சர் முண்டே ஆரம்பத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 3 லட்சம் ரூபாய் பணமும், 1.42 லட்சம் மதிப்புள்ள போனும் தெரிந்த ஒருவர் மூலம் கொடுத்து அனுப்பினார். ஆனால் அதன் பிறகும், அந்தப் பெண் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் போலீஸில் புகார் செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். ரேணு புகார் கொடுத்ததில் அவரின் சகோதரிக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். கருணா சர்மா, அமைச்சர் முண்டே மீது போலீஸில் பாலியல் புகார் செய்தவர் என்பதும், பின்னர் ஒரு கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism