Published:Updated:

சென்னை: 4 பேருடன் திருமணம்... பலருடன் நட்பு - திருடிய நகைகளுடன் கைதான பெண் - நடந்தது என்ன?!

நான்கு ஆண்களுடன் திருமணம் - கைதான பெண்

நான்கு ஆண்களைத் திருமணம் செய்து நகை, பணத்தைத் திருடிய பெண்ணை சென்னையில் போலீஸார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை: 4 பேருடன் திருமணம்... பலருடன் நட்பு - திருடிய நகைகளுடன் கைதான பெண் - நடந்தது என்ன?!

நான்கு ஆண்களைத் திருமணம் செய்து நகை, பணத்தைத் திருடிய பெண்ணை சென்னையில் போலீஸார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.

Published:Updated:
நான்கு ஆண்களுடன் திருமணம் - கைதான பெண்

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரின் மூத்த மகன் நடராஜன், ஒரு உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நடராஜன் உணவு டெலிவரி செய்யும்போது அவருக்கு அபிநயா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. திருமண பேச்சு எழுந்தபோது, அபிநயா தனக்கு யாரும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

கைதான பெண்
கைதான பெண்

கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடராஜன் உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன பின்பு இருவரும், ஆரம்பத்தில் நகைக்கடையில் வேலைக்குச் சென்றுள்ளார்கள். பின்னர் அபிநயா வேலைக்குச் செல்வதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 19-ம் தேதி வழக்கம் போல, அனைவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் அபிநயா மட்டும் இருந்துள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் அபிநயாவைக் காணவில்லை என்பதால், வீட்டைத் திருந்து பார்த்தபோது நடராஜனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், புதிய பட்டுப்புடவை ஆகியவற்றை காணவில்லை. அபிநயாவின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நடராஜன், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

திருமணத்தின் போது
திருமணத்தின் போது

இந்த புகாரின் அடிப்படையில், அபிநயாவின் ஆதார் எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அபிநயா மதுரையைச் சேர்ந்தவர் என்பதும், அவர், தனது ஆதாரை பயன்படுத்தி 30-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கியது தெரியவந்தது. நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கடந்த நவம்பர் 30-ம் தேதி அபிநயா, செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த போலீஸார் அபிநயாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியே வந்துள்ளன. "அபிநயா கடந்த 2011-ம் ஆண்டு மன்னார் குடியைச் சேர்ந்த விஜய் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். ஒரு மாத காலம் விஜய்யுடன் வாழ்க்கை நடத்திய நிலையில் விவாகரத்து பெற்று அவரை பிரிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு சிவகங்கை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்துவந்திருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

கைதான பெண்
கைதான பெண்

இதனைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு கம்ப்யூட்டர் கிளாஸில் பழக்கம் ஏற்பட்ட பிரபு என்பவருடன் மாயமானார். செந்தில்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணை செய்த போலீஸார், நகையை அடகுவைத்து ஒரு வாரம் கேரளாவுக்குப் பிரபுவுடன் சுற்றுலாவுக்குச் சென்றது தெரியவந்தது. அடுத்ததாக 2018-ம் ஆண்டு துணிக்கடையில் வேலை பார்க்கும்போது பழக்கம் ஏற்பட்ட உதயா என்பவருடன் மாயமானார். அப்போதும் அவரை போலீஸ் கண்டுபிடித்துக் கொடுத்தது.

பிறகு கடைசியாக 2020-ம் ஆண்டு சென்னைக்கு வந்த அபிநயா கேளம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்திருக்கிறார். கடைக்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்துகொண்டார். பத்து நாள்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டனர். கடைசியாகத் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நடராஜனைத் திருமணம் செய்து அங்கிருந்த நகை, பணத்துடன் தலைமறைவானார்.

கைதான பெண்
கைதான பெண்

நடராஜன் வீட்டிலிருந்து திருடிய நகைகளை விற்பனை செய்து தனது ஆண் நண்பருக்கு ஒருவருக்கு விலையுயர்ந்த பொருள்களைப் பரிசாக அளித்துள்ளார். அதோடு, தனது இரண்டாவது கணவர் செந்தில்குமாருடன் சில நாள்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார். கடைசியாக, கேளம்பாக்கம் பகுதியில் ஏற்கனவே தங்கியிருந்த விடுதிக்கு வந்து தங்கியிருக்கிறார்" என்பது தெரியவந்தது. அபிநயா மேலும் பலருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. போலீஸார், அபிநயா மற்றும் செந்தில்குமாரைக் கைது செய்து தொடர் விசாரணை நடத்திவருகிறார்கள். மேலும், அவரிடமிருந்து மூன்று சவரன் நகை, 74 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.