Published:Updated:

காப்பகத்தில் சிறுமிக்கும் பெண்ணுக்கும் நடந்த கொடூரம்; குற்றவாளியைக் காப்பாற்ற முயன்ற நிர்வாகி!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( representational image )

வடசென்னையில் செயல்படும் காப்பகம் ஒன்றில் டிரைவராக இருந்த பென்னட் என்பவர், அங்குள்ள சிறுமியையும் பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை டிரைவரின் சகோதரியான காப்பக நிர்வாகி மறைத்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வடசென்னையில் காப்பகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் காப்பகத்தில் நிர்வாகியாக இசபெல் ரிச்சர்ட்சன் என்பவர் இருந்துவருகிறார். இசபெல் ரிச்சர்ட்சனின் தம்பி பென்னட் ரிச்சர்ட்சன், காப்பகத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். இவர், காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமியையும் இன்னொரு பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியும் தனக்கு நடந்த கொடுமைகளை குழந்தைகள் நலக்குழுமத்தின் உறுப்பினரிடம் வாக்குமூலமாக அளித்திருக்கிறார். அதனால் வடசென்னை குழந்தைகள் நலக்குழுமத்தின் உறுப்பினர், பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் இசபெல் ரிச்சர்ட்சனை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அவரின் தம்பியான பென்னட் ரிச்சர்ட்சனை போலீஸார் தேடிவருகின்றனர்.

இது குறித்து பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில். ``இந்தக் காப்பகத்தில் ஆதரவற்ற சிறுமிகள் சிலர் தங்கியிருக்கின்றனர். காப்பகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து டிரைவராக இசபெல் ரிச்சர்ட்சனின் சகோதரர் பென்னட் என்பவர் டிரைவராகப் பணியாற்றிவந்திருக்கிறார். இவரைக் காப்பகத்தில் தங்க அனுமதி அளித்தது மற்ற காப்பக நிர்வாகிகளுக்கு தெரியாது. இந்தக் காலகட்டத்தில்தான் பென்னட், அங்குள்ள சிறுமி, ஒரு பெண் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

ஆவடி: திருமண ஆசைகாட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர்! -போக்சோ சட்டத்தில் கைதுசெய்த மகளிர் போலீஸ்
கைது
கைது
representational image

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தில், `கடந்த 23.6.21-ம் தேதி என்னையும் இன்னொரு பெண்ணையும் பென்னட் மிரட்டி எங்களிடம் தவறாக நடந்துகொண்டார். அதை வெளியில் சொன்னால் காப்பகத்தைவிட்டு வெளியே துரத்தி விடுவேன் என மிரட்டினார். அதனால் நாங்கள் பயந்து வெளியில் சொல்லவில்லை. பின்னர் நான் (சிறுமி) துணி துவைத்துக்கொண்டிருந்தபோது பென்னட் எல்லை மீறினார். அதை இன்னொரு பெண் பார்த்துவிட்டார். இது இசபெல்லா மேடத்துக்கு தெரிந்து அவர் எங்களிடம் விசாரித்தார். அப்போது அவர் இது தப்பில்லை என்று கூறிவிட்டார்" என்று கண்ணீர்மல்கக் கூறினார். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இசபெல்லாவைக் கைதுசெய்திருக்கிறோம். பென்னட்டால் வேறு யாராவது காப்பகத்தில் பாதிக்கப்பட்டார்களா என்றும் விசாரித்துவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு