Published:Updated:

உ.பி: `உன்னால் ஆண் குழந்தை பெற்றுத்தர முடியாதா..?' - பொதுவெளியில் மருமகளை தாக்கிய மாமியார்

பெண் தாக்கப்படும் வீடியோ ( ட்விட்டர் )

ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை என்று கூறி பெண் ஒருவரை அவர் மாமியார் பொதுவெளியில் தாக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உ.பி: `உன்னால் ஆண் குழந்தை பெற்றுத்தர முடியாதா..?' - பொதுவெளியில் மருமகளை தாக்கிய மாமியார்

ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை என்று கூறி பெண் ஒருவரை அவர் மாமியார் பொதுவெளியில் தாக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Published:Updated:
பெண் தாக்கப்படும் வீடியோ ( ட்விட்டர் )

உத்திரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டத்தில் ஆண் குழந்தை பெற்றுத் தரவில்லை எனக் கூறி குமஸ்தா என்ற பெண்ணை அவர் கணவர் மற்றும் மாமியார் தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அந்த வீடியோவில், குமஸ்தா என்ற பெண் தன்னை விட்டு விடுமாறு கதறி அழுகிறார். இருப்பினும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவரை சரமாரியாக தாக்குகின்றனர். மேலும், அவரை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

போலீஸ்
போலீஸ்

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இது தொடர்பாக போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய மஹோபா காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) சுதா சிங், ``இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். மாமியார் தன்னை தாக்கியதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். அதனால், அவர் கணவர், மாமியார் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism