Published:Updated:

`8 வருட சித்ரவதை; வாயால் சிறுநீரைச் சுத்தம் செய்யவைத்து கொடுமை!' - பாஜக பெண் பிரமுகர் கைது

பாஜக பெண் பிரமுகர் கைது

ஜார்க்கண்டில் வீட்டு வேலைக்காரப் பெண்ணை அடித்து உதைத்து சித்ரவதை செய்த பெண் பா.ஜ.க பிரமுகர் கைதுசெய்யப்பட்டார்.

`8 வருட சித்ரவதை; வாயால் சிறுநீரைச் சுத்தம் செய்யவைத்து கொடுமை!' - பாஜக பெண் பிரமுகர் கைது

ஜார்க்கண்டில் வீட்டு வேலைக்காரப் பெண்ணை அடித்து உதைத்து சித்ரவதை செய்த பெண் பா.ஜ.க பிரமுகர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
பாஜக பெண் பிரமுகர் கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க நிர்வாகியாக இருப்பவர் சீமா பத்ரா. இவர் தனது வீட்டில் வேலை செய்யும் சுனிதா என்ற பெண்ணை வீட்டில் அடைத்துவைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலைக்காரப் பெண் இது தொடர்பாக கொடுத்துள்ள வாக்குமூல வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. இதனால் பா.ஜ.க பிரமுகர் சீமா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சீமா வேலைக்காரப் பெண்ணை அடிக்கடி அடித்து உதைத்ததோடு, இரும்புக்கம்பியால் அடித்து பல்லை உடைத்திருக்கிறார். சூடான பாத்திரத்தால் அடித்ததில் சுனிதாவுக்கு உடல் முழுக்கக் காயம் ஏற்பட்டுள்ளது. தரையிலுள்ள சிறுநீரை வாயால் நக்கிச் சுத்தம் செய்யும்படிக் கூறி சீமா சித்ரவதை செய்ததோடு, சரியாகச் சாப்பாடும் கொடுக்காமல் கொடுமைப்படுத்திவந்ததாக வேலைக்காரப் பெண் சுனிதா குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வாரம் ராஞ்சியில் சீமாவின் வீட்டிலிருந்து வேலைக்காரப் பெண்ணை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சீமா
சீமா

இது தொடர்பான செய்தியைக் கேள்விப்பட்டு மாநில ஆளுநர் ரமேஷ், மாநில டி.ஜி.பி நீரஜ் சின்ஹாவைச் சந்தித்துப் பேசினார். வேலைக்கார பெண் மனிதாபிமானமற்ற வகையில் நடத்தப்பட்டது குறித்து ரமேஷ், டிஜிபி-யிடம் தனது கவலையைத் தெரிவித்தார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியான சீமாமீது நடவடிக்கை எடுக்க தாமதமாவது குறித்து ஆளுநர் கவலை தெரிவித்தார். அதோடு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

கைது
கைது

இதையடுத்து போலீஸார் பா.ஜ.க பிரமுகர் சீமாவைக் கைதுசெய்துள்ளனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சீமா, பா.ஜ.க-வின் பெண்கள் பிரிவு தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருக்கிறார். அவர்மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். சீமா வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆதிவாசி சமுதாயத்தைச் சேர்ந்த சுனிதா வீட்டு வேலை செய்துவந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.